/* */

பாதுகாப்பாக பட்டாசு வெடிங்க.. தீயணைப்புத் துறை வேண்டுகோள்

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து தீயணைப்புத் துறையினர் மாணவிகள் முன்பு செயல் விளக்கம் செய்து காட்டினர்.

HIGHLIGHTS

பாதுகாப்பாக பட்டாசு வெடிங்க.. தீயணைப்புத் துறை வேண்டுகோள்
X

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கும் தீயணைப்புத் துறையினர்.

தீபாவளி பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பது குறித்த செயல் முறை விளக்கத்தை கரூர் மாவட்ட தீயணைப்பு துறை வீரர்கள் பள்ளி மாணவர்களுக்கு அளித்தனர்.

நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மக்கள் புதிய துணி வகைகளை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். தீபாவளி பண்டிகையில் பட்டாசு, மத்தாப்புகள் வெடிப்பது வழக்கம். அரசு தொடர்ந்து மக்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வை வழங்கி வருகிறது.

கரூர் மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையில், சாரதா அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாதுகாப்பான முறையில் எவ்வாறு பட்டாசுகளை வெடிப்பது என்பது குறித்து விளக்கம் அளித்தனர்

மாணவிகளிடையே தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் பேசுகையில் பெரியவர்கள் கண்காணிப்பில் குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும், நீண்ட ஊதுபத்தி உபயோகித்து பட்டாசுகளை கொளுத்த வேண்டும், வீட்டிற்கு வெளியே திறந்த வெளியில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும், எரிந்து முடிந்த மத்தாப்புகளை தண்ணீர் உள்ள வாளிகளில் போட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டுப்பிரசுரங்களை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து கம்பி மத்தாப்பு கொண்டு இடைவெளி கடைப்பிடித்தும் மத்தாப்புகளை கொளுத்தியும், பட்டாசுகளை வெடித்தும் செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.

Updated On: 28 Oct 2021 8:00 AM GMT

Related News