/* */

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் இயற்கை விவசாய தொகுப்பினை கள ஆய்வு

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் இயற்கை விவசாய தொகுப்பினை அதிகாரிகள் கள ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் இயற்கை விவசாய தொகுப்பினை கள ஆய்வு
X

மகளிர் சுய உதவி குழுவினர் உருவாக்கிய வயலில் கள ஆய்வு நடத்தப்பட்டது.

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் இயற்கை விவசாய தொகுப்பில் வேளாண்மை உதவி இயக்குநர் (விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று) மணிமேகலை மற்றும் வேளாண்மை அலுவலர், கவுதமி ஆகியோர் சித்தலவாய் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் விவசாயிகளின் வயலினை களஆய்வு ஆய்வு செய்தனர்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கரூர் மாவட்டம், மூலம் கடந்த வருடம் இயற்கை விவசாய தொகுப்பு கிருஷ்ணராயபுரம் வட்டாரம், சித்தலவாய் கிராமத்தில் 30 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு தொடங்கப்பட்டது.

இயற்கை விவசாய தொகுப்பின் நோக்கம்: சுற்றுச் சூழலுக்கு உகந்த, குறைந்த விலை தொழில்நுட்பங்களைப் பின்பற்றி இரசாயனங்கள் மற்றும் பூச்சி கொல்லி இல்லாத விவசாய பொருட்களை உற்பத்தி செய்வதும், இயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்பை வழங்குவது இதன் நோக்கமாகும்.

இயற்கை விவசாய தொகுப்பின் சாரம்சம்: சிறு மற்றும் குறு மகளிர் விவசாயிகளிடையே இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல். இயற்கை விவசாய சான்றிதழின் மூலம் சிறந்த சந்தை விலை மூலம் சிறு மற்றும் குறு மகளிர் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல். இயற்கை வேளாண்மைக்கு தேவையான இயற்கை இடுபொருட்களான பஞ்சகாவ்யா, அமிர்த கரைசல், மீன் அமிலம், ஜீவா அமிர்தம், அக்னி அஸ்திரம், பூச்சி விரட்டி போன்றவற்றை அவர்களின் வயல்களிலேயே உற்பத்தி செய்தல்.

இயற்கை விவசாயத்தில் மகளிர் விவசாயிகளிடையே ஒருங்கிணைந்த பண்ணை முறை கருத்தை ஊக்குவித்தல்.

இதன் முதற்கட்டமாக கடந்த வருடம் இந்த இயற்கை விவசாய தொகுப்பில் உள்ள அனைத்து மகளிர் உறுப்பினர்களின் வயல்களில் மண் மற்றும் நீர் ஆய்வு, அடிப்படை பயிர் சாகுபடி, கால்நடை வளர்ப்பு போன்ற பல்வேறு விவரங்கள் தமிழ்நாடு அங்கக சான்று இணைய வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு ஆய்வின் அடிப்படையில் முதலாம் ஆண்டு சான்று 30 மகளிர் விவசாயிகளுக்கு அங்கக சான்று பெறப்பட்டது.

நடப்பு வருடம் வேளாண்மை உதவி இயக்குநர் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று மற்றும் வேளாண்மை அலுவலர் மூலம் கிருஷ்ணராயபுரம் வட்டாரம், சித்தலவாய் கிராமத்தில் மகளிர் வயல்களில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் விபரங்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, ஆய்வுகளின் அடிப்படையின் பேரில் 2 ஆம் வருட சான்றிதழ் வழங்கப்படும். இதேபோல் அடுத்த வருடமும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மூன்றாம் ஆண்டின் முடிவில் இயற்கை மகளிர் விவசாயக் குழு தொகுப்பு என சான்று வழங்கப்படுகிறது.

Updated On: 19 Feb 2024 4:36 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...