/* */

கையில் அரசாணையுடன் காத்திருக்கும் விவசாயிகள்

கையில் அரசாணையுடன் காத்திருக்கும் விவசாயிகள் கட்டிய பணத்தினை திரும்ப கொடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு.

HIGHLIGHTS

கையில் அரசாணையுடன் காத்திருக்கும் விவசாயிகள்
X

மனு கொடுக்க வந்த விவசாயிகள்.

கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் 5 ம் தேதி தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு பயிர்க்கடன்கள் ரத்து என்று அறிவித்தார். அறிவித்த கையோடு அதே மாதம் அதற்கான அரசாணையை கடந்த பிப்ரவரி மாதம் 8 ம் தேதியே வெளியிடப்பட்டது.

இந்நிலையில், 31-01-2021 ம் தேதி வரை நிலுவையில் உள்ள பயிர்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றது என்ற அறிவிப்பு வந்தும் கரூர் அருகே உள்ள மூக்கணாங்குறிச்சி கிராமம் பகுதியில் உள்ள விவசாயிகள் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர்களுக்காக வாங்கிய பயிர்க்கடன்களுக்கான தொகையினை 55 விவசாயிகளுக்கு 48 லட்சம் ரூபாயினை கடந்த பிப்ரவரி மாதம் 1 ம் தேதி முதல் அதே மாதம் 8 ம் தேதி வரை கட்டியுள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் அனைவருக்கும் பயிர்க்கடன்கள் கூட்டுறவு வங்கியில் வாங்கியவைகள் ரத்து செய்யப்படுகின்றது என்று சான்றிதழ்களும் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் கட்டப்பட்ட தொகையினை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைத்திருக்க வேண்டும். ஆனால், அந்த 55 விவசாயிகளுக்கு 48 லட்சம் ரூபாய் தொகையினை இன்று வரை வரவு வைக்காமல் மூக்கணாங்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியும், கூட்டுறவு துறையும், மாவட்ட நிர்வாகமும் அழைக்களித்துள்ளது.

ஜனவரி மாதம் 31 ம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட பயிர்க்கடன்கள் டிசம்பர் மாதம் இறுதி ஆகுது இன்றுவரை வங்கி கணக்கில் வரவு வைக்க வில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட விவசாயிகள் 55 நபர்கள் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் முறையிட்டனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உடனே தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், ஒரு வாரத்திற்குள் தீர்வு காண வேண்டுமென்றும் உத்திரவிட்டார்.

Updated On: 27 Dec 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  2. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  3. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  4. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  5. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  6. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  7. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  8. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  9. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  10. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...