/* */

கரூர் நகராட்சியில் குடிநீர் குழாய்கள் 25 கோடி மதிப்பில் மாற்றம்

காவிரி ஆற்றிலிருந்து கரூர் நகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய்கள் 25 கோடி மதிப்பீட்டில் புதிதாக மாற்றப்பட உள்ளது.

HIGHLIGHTS

கரூர் நகராட்சியில் குடிநீர் குழாய்கள் 25 கோடி மதிப்பில் மாற்றம்
X

கரூர் நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் காவிரி ஆற்றில் வாங்கல் நீரேற்று நிலையத்தில் ஆய்வு செய்கிறார் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.

கரூர் வாங்கல் கிராமத்தில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து கரூர் நகராட்சிக்கு குடிநீர் எடுத்து செல்ல பயன்படும் நீரேற்று நிலையத்தில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், கரூர் நகராட்சி பகுதிக்கு வாங்கல் காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

இதுபோல காவிரியாற்றிலிருந்து கரூர் நகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னர் பதிக்கப்பட்டதால் அவை சேதமடைந்துவிட்டன. எனவே, 25 கோடி மதிப்பீட்டில் பழைய குழாய்கள் மாற்றப்பட்டு, புதிய குழாய்கள் அமைக்கப்பட்டு தினசரி குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கரூர் நகராட்சிக்கு ரூ.68 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளன. இந்த திட்டம் இன்னும் ஒரு மாத காலத்துக்குள் நிறைவேற்றப்படும் என்றார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், கரூர் நகராட்சி ஆணையர் இராமமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 21 July 2021 8:45 AM GMT

Related News