/* */

எம்பி ஜோதிமணியை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய திமுகவினர்

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க நீ யார்? வெளியே போ என்று திமுகவினர் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

HIGHLIGHTS

எம்பி ஜோதிமணியை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய திமுகவினர்
X

திமுகவினரால் வெளியேற்றப்படும் எம்.பி. ஜோதிமணி.

கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்த இறுதி கட்ட ஆலோசனை இன்று நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் வேட்பாளரை இறுதி செய்வதற்கு வார்டு பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியிடம் கலந்து கொள்ளாமல் அவர்களாகவே தொகுதி பங்கீடு குறித்து பேசிக் கொண்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி திமுகவினரிடம் இதுகுறித்து பேசியுள்ளார். இந்நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க நீ யார்? வெளியே போ என்று திமுகவினர் ஒருமையில் பேசியதாக தெரியவருகின்றது. தொடர்ந்து வெளியேறிய ஜோதிமணி, பேச்சவார்த்தையின்போது திமுகவினர் வெளியேற சொன்னதாக குற்றச்சாட்டு வைத்ததோடு, பேச்சுவார்த்தைக்கு வந்த கூட்டணி கட்சியினரை வெளியே போகச் சொன்னது கூட்டணி தர்மமா என்று ஜோதிமணி ஆவேசத்துடன் கூறிவிட்டு வெளியேறினார். பேச்சுவார்த்தையின்போது எம்.பி ஜோதிமணியை வெளியே போகச் சொன்னதாக, திமுக கட்சி அலுவலகம் முன்பு ஆவேசத்துடன் ஜோதிமணி பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Updated On: 31 Jan 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்