/* */

மாவட்ட ஊராட்சி துணை தேர்தல் ரத்து : முற்றுகையிட்ட அதிமுகவினர் கைது

மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதால் அதிமுகவினர் தேர்தல் அதிகாரி வாகனத்தை முற்றுகையிட்டதால் கைது.

HIGHLIGHTS

மாவட்ட ஊராட்சி துணை தேர்தல் ரத்து : முற்றுகையிட்ட அதிமுகவினர் கைது
X

தேர்தல் அதிகாரி வாகனத்தை முற்றுகையிட்டதால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர்.

கரூர் மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கரூர் மாவட்ட ஊராட்சியை பொருத்தவரை மொத்தம் உள்ள 12 உறுப்பினர்களில் அதிமுகவுக்கு 8 உறுப்பினர்கள் உள்ளனர். திமுகவிற்கு 4 உறுப்பினர்கள் உள்ளனர்.

மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த கண்ணதாசன் உள்ளார். துணைத் தலைவர் தேர்தல் இன்று இரண்டு முப்பது மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சரியாக 2.30 மணிக்கு அதிமுகவைச் சேர்ந்த 8 உறுப்பினர்களும், திமுகவைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும் மாவட்ட ஊராட்சி கூட்டத்திற்கு வந்தனர்.

அப்பொழுது துணை தலைவர் பதவிக்கு நிற்பவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என தேர்தல் நடத்தும் அலுவலரான மந்திராசலம் அறிவித்தார். இதையடுத்து அதிமுக சார்பில் திருவிகா துணைத் தலைவர் தேர்தலுக்கு போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

ஆனால் திமுக தரப்பினர் எழுந்து 10:30 மணிக்கு துணை தலைவர் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது இப்பொழுது பிற்பகல் இரண்டு முப்பது மணிக்கு நடத்துகிறீர்கள். இந்த குளறுபடியால் தேர்தலை நடத்த வேண்டாம் ஒத்தி வையுங்கள் என கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் மந்திராசலம் தேர்தலை ஒத்தி வைப்பதாக கூறி விட்டு வெளியேறினார். இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் தேர்தல் நடத்தும் அலுவலர் மந்திரத்திராசலத்தின் வாகனத்தை முற்றுகையிட்டு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவர்கள் தேர்தலை ஒத்தி வைத்ததற்கான காரணத்தை கேட்டு , கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தல் தேர்தல் நடத்தும் அலுவலர் மந்திராசலம் எந்தவித பதிலும் சொல்லாமல் இருந்தார். இதனால், அங்கிருந்த போலீசாருக்கும் அதிமுகவில் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலரின் வாகனத்தை மறித்து முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 50 க்கும் அதிகமான அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் கரூர் வெள்ளியணை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 22 Oct 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  3. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  10. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...