/* */

'இதோ பிடிங்க முககவசம்; அதோ குடிங்க கப சுர பானம்'

கரூர் பஸ் ஸ்டாண்டில் பொது மக்களுக்கு கப சுர பானம் மற்றும் மாஸ்க் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

இதோ பிடிங்க முககவசம்;   அதோ குடிங்க கப சுர பானம்
X

கரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் பொதுமக்களுக்கு கப சுர பானம் வழங்கினார்.

கரூர் பேருந்து நிலையம் அருகில் எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பர் நல சங்கம் சார்பில் கரூர் மாவட்ட நகர காவல் நிலைய ஆய்வாளர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், மாஸ்க் ஆகியவற்றை வழங்கினார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது . இதன் காரணமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. தமிழக அரசு சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்கும் விதமாக இன்று கரூர் மாவட்ட எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பர் நல சங்க உறுப்பினர்கள் சார்பில் கரூர் மாவட்ட நகர காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியம், பேருந்து நிலையப் பகுதியில், பொதுமக்களின் வாகனங்களை நிறுத்தியும், நடந்து செல்லும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் கபசுர குடிநீர், முகக்கவசம், சானிடைசர் ஆகியவற்றை வழங்கினார்.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு முக கவசம் அணிவதில் அவசியத்தை உணர்த்தி, முகக்கவசம் வழங்கினார். இந்நிகழ்வின் போது கரூர் மாவட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர், எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பர் சங்க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 19 April 2021 10:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...