/* */

கால்நடை வளர்ப்போருக்கு ரூ. 2 லட்சம் கடன் உதவி

கரூர் மாவட்டத்தில் கால் நடை வளர்ப்போருக்கு ரூ. 2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

HIGHLIGHTS

கால்நடை வளர்ப்போருக்கு ரூ. 2 லட்சம் கடன் உதவி
X

மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்போருக்கு வங்கிகள் மூலம் புதிய கால்நடை கிசான் கடன் அட்டை மூலம் ரூ 2 லட்சம் வரை கடன் வழங்கவும், ஏற்கனவே வழங்கப்பட்ட கடன் அட்டைகளுக்கு ரூ .3 லட்சம் வரை கடன் தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான சிறப்பு முகாம் மாவட்டத்தின் அனைத்து கால்நடை மருந்தகங்களிலும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் வரும் 25.02.2022 வரை நடத்தப்படுகிறது. ஆர்வமுள்ள கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அணுகி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 2 புகைப்படம் ஆகியவற்றை இணைத்து சிறப்பு முகாமில் ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.

தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட வட்டியில் கடன் வழங்கப்படும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 Nov 2021 9:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  2. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  3. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  4. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  5. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  6. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  7. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  8. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  9. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  10. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...