/* */

திருக்குறள் கூறினால் பெட்ரோல் இலவசம்

கரூரில் திருக்குறள் கூறினால் பெட்ரோல் இலவசம் என்ற பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவரின் அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

கரூரை சேர்ந்தவர் செங்குட்டுவன். தொழிலதிபரான இவர் திருக்குறள் மீது அலாதியான பற்று கொண்டவர். திருவள்ளுவர் பெயரில் கலை அறிவியல் கல்லூரி, மேலாண்மை கல்லூரி மற்றும் உணவு விடுதிகளை நடத்தி வருகிறார்.மேலும் திருக்குறளை வளர்க்க பல்வேறு முயற்சிகளை செய்கிறார்.இதன் ஒரு பகுதியாக தனது பெட்ரோல் பங்க்கில் பத்து திருக்குறள்களை சொல்லும் மாணவரின் பெற்றோருக்கு அரை லிட்டர் பெட்ரோல் இலவசம். 20 குறளை கூறும் மாணவரின் பெற்றோருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இந்த அறிவிப்பு குறித்து அறிந்த பொதுமக்கள் ஆச்சரியப்பட்டு, தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்று திருக்குறளை கூற வைத்து இலவசமாக பெட்ரோலை நிரப்பி செல்கின்றனர்.

இதுகுறித்து செங்குட்டுவன் கூறுகையில், மாணவர்களின் வாசிக்கும் பழக்கத்தை கூட்டுவதற்காக இலவச பெட்ரோல் வழங்குகிறோம். குறிப்பாக இளைய தலைமுறை பண்போடு வளர நமக்கு கிடைத்த அறநூல் திருக்குறள். எனவே திருக்குறளை வாசிக்க வேண்டும் என்பதற்காக இலவச பெட்ரோல் வழங்குகிறோம் என்றார்.

Updated On: 13 Feb 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்