/* */

கேரளாவில் குமரி மீனவர் படகுக்கு ரூ.1லட்சம் அபராதம் விதித்ததாக புகார்

கேரளாவில் குமரி மீனவர் படகுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து ரூ. 15 லட்சம் மீன்களை பறிமுதல் செய்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கேரளாவில் குமரி மீனவர் படகுக்கு ரூ.1லட்சம் அபராதம் விதித்ததாக புகார்
X

கேரளாவில் சிக்கி உள்ள குமரி மீனவர்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பிரபின், இவருக்கு செந்தமான ஹெவன் என்ற விசைபடகை குஜராத் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடிப்பதற்காக குஜராத் மாநிலத்தை சேர்ந்த கமலேஷ் என்பவரது பெயரில் பெயர்மாற்றம் செய்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் 22 ம் தேதி பிரபின் உட்பட குமரி மாவட்ட மீனவர்கள் 4 பேர் மற்றும் கேரளாவை சேர்ந்த 10 பேருடன் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

அவர்கள் கடந்த 15 நாட்களுக்கு மேலாக சுமார் 500 நாட்டிகல் தொலைவில் கர்நாடக மாநிலம் ரத்தினகிரி ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி தொழில் செய்துவிட்டு கிடைத்த மீன்களை விற்பனை செய்வதற்காக கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்திற்கு வந்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த மீன்வளத்துறை அதிகாரிகள் படகு கரை ஒதுங்குவதற்கான அனுமதி கடிதத்தை கேட்டுள்ளனர், அதனை படகில் இருந்த மீனவர்கள் காண்பித்த போது ஆன்லைன் பதிவு தவறுதலாக இருந்துள்ளது.

இதனையடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் படகை துறைமுகத்தில் அனுமதிக்க வேண்டுமென்றால் ஒரு ஆண்டுக்கான துறைமுக அனுமதி கட்டணம் ரூ. 25 ஆயிரம் செலுத்தவேண்டும் என கூறி உள்ளனர்.

அதற்கு படகில் இருந்த மீனவர்கள் சம்மதம் தெரிவித்து பணத்தை கட்டி ரசீதை பெற்றுள்ளனர், இதனையடுத்து மீன்களை இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்கிய மீன்வளத்துறை அதிகாரிகள் சிறிதுநேரம் கழித்து மீண்டும் படகை சிறைப்பிடிப்பதாக கூறி படகில் இருந்த சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள மீன்களை பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளனர்.

மேலும் அனுமதி இல்லாமல் துறைமுகத்திற்குள் நுழைந்ததால் 1 லட்சத்துக்கு மேல் அபராதம் செலுத்தக்கூறி கேரள மீன்வளத்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருவதாக குமரி மாவட்ட மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் துறைமுகத்தில் கரை ஒதுங்க கட்டவேண்டிய தொகையை கட்டியபின்பும் மீன்களை எல்லாம் பறிமுதல் செய்து ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் அபராதம் செலுத்த சொல்லும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து தங்களது படகு மற்றும் பறிமுதல் செய்த மீன்களை திரும்ப ஒப்படைக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 18 March 2022 7:15 AM GMT

Related News