/* */

தேர்வில் வெற்றி பெற்ற காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணி ஆணை வழங்கிய எஸ்பி

குமரியை சேர்ந்த 26 பேர் காவல் உதவி ஆய்வாளராக தேர்வு பெற்றனர். அவர்களுக்கு பணி ஆணையை எஸ்.பி பத்ரிநாராயணன் வழங்கினார்.

HIGHLIGHTS

தேர்வில் வெற்றி பெற்ற காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணி ஆணை வழங்கிய எஸ்பி
X

குமரி மாவட்டத்தில் புதிய சப் இன்ஸ்பெக்டர்களாக பணி ஆணை பெற்றவர்களுடன் மாவட்ட போலீஸ் எஸ்.பி. பத்ரிநாராயணன்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட நேரடி காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 ஆண்கள், 06 பெண்கள் என மொத்தம் 26 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான பணி நியமன ஆணையை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வழங்கினார்.

முன்னதாக புதிய உதவி ஆய்வாளர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்த அவர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை கூறி பணி நியமன ஆணையை வழங்கினார்.

மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்று நேரடி உதவி ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு, காவல்துறை பணியில் நேர்மையுடனும், பொறுப்புடனும் தங்களது பணியினை திறம்பட செய்ய வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

Updated On: 23 Aug 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  2. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  3. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  4. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  5. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  6. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  7. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  8. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!
  9. ஆன்மீகம்
    ஆறுமுகனின் அருள்மொழிகள்: ஆன்மிகத்தின் ஊற்றுக்கண்
  10. வீடியோ
    🔴LIVE : T20 World Cup squad ROHIT SHARMA press meet |...