/* */

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களையும் மாணவர்களை  மீட்க வேண்டும் : குமரி எம்.பி.

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களையும் மாணவர்களை  உடனடியாக மீட்க வேண்டும் என மத்திய அரசுக்கு குமரி எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்

HIGHLIGHTS

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களையும் மாணவர்களை  மீட்க வேண்டும் : குமரி எம்.பி.
X

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்ட உடனே, இந்தியாவிலிருந்து அங்கு பயிலும் மாணவர்கள், மற்ற இந்தியர்களை விமானம் மூலம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஆனால் திடீரென ரஷ்யா போர் தொடுத்ததால் அங்குள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை தடைப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் மருத்துவம் , இன்ஜினியரிங் போன்ற பல்வேறு படிப்புகள், பல கல்வி நிலையங்களில் பயின்று வருகின்றனர். தமிழகத்தில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு படித்து வருகின்றனர் என்ற தகவல் அறிந்ததாகவும், எனது தொகுதியில் இருந்தும் மருத்துவம் பயிலும் 15 பேர் இங்கே திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

அங்கு கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். எனவே போர் தொடங்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டில் அபாயத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை குறிப்பாக தமிழ்நாட்டு மாணவர்களையும், பொதுமக்களையும் சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்டு இந்தியா கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் கடிதம் அனுப்பி உள்ளார்.

Updated On: 26 Feb 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா