/* */

குமரியில் ஒரே நாளில் 1,813 வாகன ஓட்டிகள் மீது வழக்கு: போலீசார் அதிரடி

குமரியில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 1813 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

குமரியில் ஒரே நாளில் 1,813 வாகன ஓட்டிகள் மீது வழக்கு: போலீசார் அதிரடி
X

பைல் படம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமலும், உரிய ஆவணங்கள் இன்றியும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகத்துடன் வாகனங்களை இயக்குவதால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.

மேலும் விதிமுறைகளை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளால் சரியான முறையில் வாகனங்களை இயக்கி வரும் வாகன ஓட்டிகளுக்கும், சாலையில் நடந்து செல்லும் பொது மக்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கவும் போக்குவரத்து விதி மீறல்களை தடுக்கவும் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற வாகன சோதனையில் தலைக்கவசம் இல்லாதது, உரிய ஆவணங்கள் இல்லாதது, அதிவேகம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஒரேநாளில் 1813 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த மூன்று மாதங்களில் விதி மீறல்களில் ஈடுபட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகள் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Updated On: 27 Jan 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...