/* */

நாகர்கோவில் நகரில் களை கட்டிய தீபாவளி விற்பனை

தீபாவளி விற்பனையையொட்டி வேப்பமூடு பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

HIGHLIGHTS

நாகர்கோவில் நகரில் களை கட்டிய தீபாவளி விற்பனை
X

deepavali greetings in tamil-தீபாவளி கொண்டாட்டம்.(கோப்பு படம்)

குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டா டப்படும். தீபாவளி பண்டி கைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் மாவட் டத்தில் உள்ள கடை வீதி களில் இன்று கூட்டம் அலைமோதியது.

நாகர்கோவிலில் கடந்த 2 நாட்களாக காலையில் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று காலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. இதையடுத்து கடை வீதிகளுக்கு காலை முதலே பொதுமக்கள் வரத்தொடங்கினார்கள்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொது மக்கள் இருசக்கர வாகனங்களிலும், நான்கு சக்கர வாகனங்களிலும் குடும்பத்தோடு கடை வீதிக்கு வந்திருந்தனர். இதனால் நாகர்கோ வில் செம்மங்குடி ரோட்டில் கூட்டம் அலை மோதியது.

ஜவுளிக்கடை களில் தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகள் பல்வேறு டிசைன்களில் விற்பனைக்கு வந்திருந்தது. குழந்தைகள் முதல் பெரி யவர்கள் வரை அதை எடுத்து மகிழ்ந்தனர். மீனாட்சிபுரம் சாலை, கலெக் டர் அலுவலக சாலை, செட்டிகுளம், வட சேரி, வேப்பமூடு பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

பொதுமக்கள் குடும்பத் தோடு வந்து புத்தாடைகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர். இதேபோல் தீபாவளி பண்டிகையை யொட்டி பேக்கரிகளில் பல்வேறு விதமான இனிப்பு வகைகளும் தயார் செய்து வைக்கப் பட்டுள்ளது. பொதுமக்கள் அவற்றை வாங்கி சென்றனர்.

பட்டாசு கடைகளிலும் இன்று கூட் டம் அதிகமாக இருந்தது. பல்வேறு விதமான பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை ஆர்வமாக வாங்கி சென்றனர். ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகள், பேக்கரிகளில் கூட்டம் அலைமோதியதையடுத்து நாகர்கோவில் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

கோட்டார், செட்டிகுளம், வடசேரி பகுதிகளில் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அண்ணா பேருந்து நிலையம், வட சேரி பேருந்து நிலையங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட் டது. கடை வீதிகளில் கூட்டம் அதிகமாக இருந்ததையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்பேரில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மப்டி உடை யில் ரோந்து சுற்றி வந்த காவல்துறையினர், சந்தேகப்ப டும்படியாக நபர்கள் யாராவது சுற்றித்திரிந்தால் அவர்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறும் ஒலி பொருக்கி மூலமாக அறி விப்புகள் வெளியிடப்பட் டது.

அஞ்சுகிராமம், கன்னி யாகுமரி, கொட்டாரம், ஆரல்வாய்மொழி, குளச்சல், தக்கலை, மார்த்தாண்டம், இரணியல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடை வீதிகளிலும் இன்று ஜவுளிகள் எடுப்பதற்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். போக்குவரத்து காவல்துறையினர் ஆங்காங்கே வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

அண்ணா பேருந்து நிலையம், வடசேரி, கோட்டார், செட்டிகுளம் பகுதிகளில் வாகன சோதனை நடத்தப் பட்டது. ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.

Updated On: 8 Dec 2023 9:54 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...