/* */

குமரியில் போக்குவரத்து விதிமீறல்: ஒரே நாளில் 1727 வழக்குகள் பதிவு

கன்னியாகுமரியில், போக்குவரத்து விதிகளை மதிக்காத வாகன ஓட்டிகள் மீது, ஒரே நாளில் 1727 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

HIGHLIGHTS

குமரியில் போக்குவரத்து விதிமீறல்: ஒரே நாளில் 1727 வழக்குகள் பதிவு
X

கிள்ளியூரில், வாகனச் சோதனையின் போது, காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார்.

வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிதல், சீட் பெல்ட் அணிதல் போன்றன கட்டாயம் என்ற நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில், பல வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல், உரிய ஆவணங்கள் இல்லாமலும், அதிக பாரம் ஏற்றிக் கொண்டும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்வது வாடிக்கையாக அமைந்தது.

இதனால் விபத்துகள் அதிகரிப்பதுடன், விதிமுறைகளை பின்பற்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுதொடர்பான வந்த தொடர் புகார்களை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வாகனச்சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.

அதன்படி, குமரி மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லை பகுதிகளிலும், ஒரே நாளில் இன்று நடைபெற்ற வாகனச்சோதனையில் தலைக்கவசம், உரிய ஆவணங்கள் இன்றி வருதல், மது அருந்தி வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக செல்லுதல் என, போக்குவரத்து விதிகளை மீறியதாக 1727 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Updated On: 14 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?