/* */

நாேய் தாெற்று பரவும் அபாயம்: எல்லை சாேதனையை தீவிரப்படுத்த பாெதுமக்கள் காேரிக்கை

கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் வருபவர்களுக்கு சோதனையை கட்டாயமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

நாேய் தாெற்று பரவும் அபாயம்: எல்லை சாேதனையை தீவிரப்படுத்த பாெதுமக்கள் காேரிக்கை
X

குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை சோதனைச் சாவடி.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை தற்போது கொரோனா நோய் தொற்று குறைந்து இருக்கும் நிலையில் குமரியை தொட்டு அமைந்துள்ள திருவனந்தபுரம் மாவட்டம் உட்பட கேரளாவில் நோய் தொற்றின் தாக்கம் கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த 5 ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வர ஆர்.சி.பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கட்டாயம் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் நாளை கேரளாவில் கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான திருவோணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

இதற்காக பொருட்கள் வாங்கவும், உறவினர்கள் வீடுகளுக்கு செல்லவும் என பலர் கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் வருகின்றனர், ஆனால் எல்லை பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்படாததால் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் எந்தவித தங்கு தடையும் இன்றி குமரி மாவட்டம் வந்து செல்கிறது.

இந்நிலையில் குமரியில் நோய் தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன, தற்போது கேரளாவில் நாளொன்றுக்கு 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் குமரி எல்லை சோதனைச் சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தபடாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

குமரி மாவட்டத்தில் உள்ள பிரதான சோதனைச் சாவடியான களியக்காவிளை சோதனைச்சாவடி உட்பட ஏழு சோதனை சாவடிகளிலும் போலீசார், சுகாதாரதுறை, வருவாய்துறை உள்ளிட்ட 3 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மூலம் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பானது அறிவிப்பாக மட்டுமே இருப்பது பொதுமக்களை அச்சம் அடைய செய்து உள்ளது.

Updated On: 20 Aug 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  2. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  4. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  5. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  6. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  7. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  8. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  9. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  10. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!