/* */

எல்லா ஞாயிற்றுகிழமையும் கேரளா பேருந்துகள் இயங்கும் -மக்கள் மகிழ்ச்சி

இனி எல்லா ஞாயிற்று கிழமையும் கேரளாவிற்கு அரசு பேருந்துகள் இயங்கும் என்ற அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

எல்லா ஞாயிற்றுகிழமையும் கேரளா பேருந்துகள் இயங்கும் -மக்கள் மகிழ்ச்சி
X

கொரோனா, ஓமிக்கிரான், மற்றும் பறவை காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வந்த கேரளா மாநிலத்தில் நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஞாயிற்று கிழமை முழு ஊராடங்கை அறிவித்து உத்தரவு பிறப்பித்தது கேரளா அரசு. இதன் காரணமாக கடந்த 6 வாரங்களாக கேரளாவில் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது.

தமிழகத்தில் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஞாயிற்று கிழமைகளில் தமிழக அரசு பேருந்துகள் இரு மாநில எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக பல்வேறு காரணங்களால் கேரளா செல்பவர்கள் மற்றும் கேரளாவில் இருந்து தமிழகம் திரும்புவார்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இந்நிலையில் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு உத்தரவை கேரள அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இனி எல்லா ஞாயிற்று கிழமைகளில் கேரளா தமிழகம் இடையிலான அரசு பேருந்துகளின் சேவை வழக்கம் போல் நடைபெறும். அதன்படி நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு தமிழக அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும். அதே போன்று கேரளா அரசு பேருந்துகளும் கன்னியாகுமரி மாவட்டம் வரும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 15 Feb 2022 1:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  4. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  6. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  7. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  8. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  9. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  10. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்