/* */

குமரியில் மதகலவரத்தை தூண்டும் வகையில் பேசி தலைமறைவாக இருந்த பாதிரியார் கைது.

குமரியில் மதகலவரத்தை தூண்டும் வகையில் பேசி தலைமறைவாக இருந்த பாதிரியாரை போலீசார் கைது செய்த்தனர்.

HIGHLIGHTS

குமரியில் மதகலவரத்தை தூண்டும் வகையில் பேசி தலைமறைவாக இருந்த பாதிரியார் கைது.
X

தலைமறைவாக இருந்த பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையாவை மதுரையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.


.கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பகுதியில் அருமனை வட்டார கிருஸ்தவ இயக்கம் சார்பில் கடந்த 18 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது பேசிய பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா இந்துக்கள், இந்து கோவில்கள் இந்து மத நம்பிக்கைகள் குறித்தும் நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி குறித்தும் தரக்குறைவாக விமர்சித்தாரம். மேலும் பாரத பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, பாஜக மற்றும் இந்து இயக்கங்கள் தொடர் போராட்டங்கள் நடத்திய நிலையில், பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா மீது போலீசார் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து, நேற்று மாலை முதல் பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா தலைமறைவானார், அவரை பிடிக்க குமரி மாவட்ட காவல்துறை சார்பில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.

இதனிடையே பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்யவில்லை என்றால் போராட்டம் தீவிரமாகவும் என பாஜக மற்றும் இந்து இயக்கங்கள் அறிவித்ததால் குமரி மாவட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதனிடையே, தலைமறைவாக இருந்த பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையாவை மதுரை பாண்டி கோயில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பங்குதந்தை ஜார்ஜ் பொன்னையாவை, மதுரை, விருதுநகர் மாவட்ட எல்லையான கள்ளிக்குடி காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்குப் பின்னர், கன்னியாகுமரிக்கு அழைத்து வரப்பட்ட பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா, மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 24 July 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்