/* */

குமரியில் குவியும் ஐயப்ப பக்தர்கள்:ஜோரான விற்பனையால் வியாபாரிகள் மகிழ்ச்சி

முக்கடல் சங்கமிக்கும் குமரியில் குவியும் ஐயப்ப பக்தர்கள் காரணமாக விற்பனை படு ஜோரான நடப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

HIGHLIGHTS

குமரியில் குவியும் ஐயப்ப பக்தர்கள்:ஜோரான விற்பனையால் வியாபாரிகள் மகிழ்ச்சி
X

குமரியில் கூடிய சுற்றுலா பயணிகள்

சர்வதேச சுற்றுலா தலமாகவும் ஆன்மீக தலமாகவும் காணப்படுகிறது முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றுலா படகில் சென்று ரசிப்பார்கள்.

மேலும் அதிகாலையில் கடலில் சூரியன் உதிக்கும் காட்சியும் மாலையில் சூரியன் மறையும் இயற்கை காட்சியையும் கண்டு ரசிப்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரகனக்கான சுற்றுலா பயணிகள் குமரிக்கு வந்து செல்வார்கள்.

இந்நிலையில் கொரோனா நோய் தொற்று ஊரடங்கு காரணமாக 19 மாதங்கள் குமரியில் பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தனர், மேலும் குமரியில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக சுற்றுலா பயணிகள் குமரிக்கு வருவதை தவிர்த்து இருந்தார்கள்.

இதன் காரணமாக குமரி சுற்றுலா தலங்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது, மேலும் அங்கு கடை வைத்து இருந்த வியாபாரிகளும் வாழ்வாதாரம் இழந்தனர்.

இந்நிலையில் குமரியில் தற்போது சபரிமலை கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் ஐயப்ப பக்தர்கள் குமரிக்கு வந்து செல்கின்றனர். அதைப்போல் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்து வருகிறது. அவர்கள் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் குளித்தும் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகில் சென்றும் மகிழ்ந்தார்கள்.

அதைப்போல் அதிகாலையில் கடலில் சூரியன் உதிக்கும் அற்புத இயற்கை நிகழ்வை கண்டு கழித்தனர். மேலும் கடற்கரை பகுதிகளில் அமைந்துள்ள கடைகளில் தங்களுக்கு தேவையான பாசி, சங்கு உள்ளிட கடற் பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றார்கள்.

குமரியில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். குமரி கடைற்கரை முழுவதும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு போலீசார் பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

Updated On: 13 Dec 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?