/* */

அரசு பேருந்து மற்றும் 2 லாரிகள் அடுத்தடுத்து மோதியதில் 8 பேர் படுகாயம்

குமரியில் அரசு பேருந்து மற்றும் 2 லாரிகள் அடுத்தடுத்து மோதியதில் 8 பேர் படு காயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

அரசு பேருந்து மற்றும் 2 லாரிகள் அடுத்தடுத்து மோதியதில் 8 பேர் படுகாயம்
X

கன்னியாகுமரியில் சாலை விபத்து, ௮ பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி பகுதியில் இருந்து ஜல்லி கற்களை அதிக பாரமாக ஏற்றி கொண்டு மார்த்தாண்டம் நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்தது.

நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி அருகே அதிவேகமாக வந்து கொண்டு இருந்த லாரியை கண்ட ஆரல்வாய்மொழி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிசந்திரன் டிப்பர் லாரியை நிறுத்தினார்.

ஆனால் போலீசாரை கண்டதும் லாரி கூடுதல் வேகம் எடுக்க அதனை துரத்தி பிடிக்க தனது இருசக்கர வாகனத்தில் சிறப்பு ஆய்வாளர் விரட்டி சென்றார்.

போலீசை பார்த்து கொண்டே முன்னாள் சென்ற லாரி மற்றும் அரசு பேருந்தை முந்தி சென்றதில் நிலை தடுமாறிய டிப்பர் லாரி சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்தது விபத்துக்குள்ளானது.

இதில் டிப்பர் லாரி பின்னால் சிமென்ட் பாரம் ஏற்றி வந்த மற்றோரு லாரியும் அதன் பின்னால் வேளாண்கன்னியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டு இருந்த அரசு விரைவு பேரூந்தும் அடுத்தடுத்து டிப்பர் லாரி பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அரசு பேருந்து ஓட்டுநர் தியாகராஜன் மற்றும் பயணிகள் உட்பட எட்டு பேர் படுகாயம் அடைந்தனர், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த ஆரல்வாய்மொழி போலீசார் விசாரனை மேற்கொண்டனர்.

விபத்து காரணமாக நாகர்கோயில் - நெல்லை சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On: 25 July 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...