/* */

சித்திரை மாதத்தில் குமரியை அலங்கரிக்கும் கனிகொன்றை மலர்கள்

சித்திரை மாதத்தில் குமரியில் உள்ள சாலைகளை கனி கொன்றை மலர்கள் அலங்கரித்து வருகிறது.

HIGHLIGHTS

சித்திரை மாதத்தில் குமரியை அலங்கரிக்கும் கனிகொன்றை மலர்கள்
X

தங்க நிறத்தில் ஜொலித்து பூத்து குலுங்கும் கனிக்கொன்றை மலர்கள்

கொன்றை மரங்களில் பல்வேறு வகைகள் உள்ள நிலையில், இவற்றில் கனிக்கொன்றை எனப்படும் சரக்கொன்றை மரங்கள் விசேஷமானவை.

Cassia fistula என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த மரங்களில் தங்கமழை பொழிவது போன்று பூக்கள் கொத்துக் கொத்தாக பூத்துக் குலுங்கும். இதனால் இம்மர பூக்களை 'Golden Shower' என்றும் வர்ணிக்கப்படுவதுண்டு.

இளவேனில் காலம் அல்லது வசந்த காலத்தில் பூத்துக் குலுங்கும் இம்மரங்கள் சித்திரை மாதப் பிறப்பை வரவேற்கும் வகையில் இருப்பது தனி சிறப்பாகும்.

இந்த மரங்கள் குமரி மாவட்டத்தில் வீடுகளின் முன்பும் கோவில்களிலும் அதிக அளவிலும் காணப்படுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரளாவிலும் சித்திரை விஷு கனி காணல் நிகழ்ச்சியில் கனிக்கொன்றை பூக்களுக்கு முக்கிய இடம் உண்டு.

அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு தட்டுகளில் பல்வேறு வகையான கனிகளுடன், மஞ்சள் நிற கனிக்கொன்றை பூக்களையும் வைத்து பார்த்தால் அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் அமையும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

கோவில்களில் நடைபெறும் விஷூ கனி காணல் நிகழ்ச்சிகளிலும் கனிக்கொன்றை பூக்கள் வைக்கப்படுகின்றன.

அதனை சிறப்பு வாய்ந்த இந்த கனிக்கொன்றை பூக்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை ஓரம் உள்ள மரங்களில் பூத்து குலுங்குகின்றன.

Updated On: 14 April 2022 1:45 PM GMT

Related News