/* */

1350 ஏழைகளுக்கு தினசரி உணவு - களத்தில் அசத்தும் எம்.எல்.ஏ

ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்த 6 கிராமங்களை சேர்ந்த 1350 ஏழைகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு MLA தினசரி உணவு வழங்கினார்

HIGHLIGHTS

1350 ஏழைகளுக்கு தினசரி உணவு - களத்தில் அசத்தும் எம்.எல்.ஏ
X

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு மாநிலம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊராடங்கை அமைப்படுத்தியது, இதன் காரணமாக செங்கல் சூலை தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், தின கூலி தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் பாதிப்படைந்து உள்ளனர்.

இந்நிலையில் தினசரி வேலைக்கு சென்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் உணவு சாப்பிட்டு வந்த கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை, கரியமானிக்க புரம், வெள்ளமடம், சுவாமி தோப்பு உட்பட 6 கிராமங்களை சேர்ந்த 1350 ஏழைகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் முழு ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்து வந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த கன்னியாகுமரி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாநில கழக அமைப்பு செயலாளருமான தளவாய் சுந்தரம் தனது சொந்த செலவில் உணவு வழங்கி வருகிறார்.

தினசரி பிற்பகல் மற்றும் இரவு உணவை தனது அலுவலகத்திலேயே தயாரித்து அதனை உணவின்றி தவித்த 6 கிராமங்களை சேர்ந்த 1350 நபர்களுக்கு வழங்கி பசியாற்றி வருவதோடு குழந்தைகளுக்கு தேவையான பிஸ்கட், பால்பொடி, பழங்கள் உள்ளிட்டவற்றையும் தனது சொந்த செலவில் வழங்கி வருகிறார்.

கொரோனா பரவல் சூழ்நிலையில் குமரி மாவட்டத்தில் வேறு எந்த சட்டமன்ற உறுப்பினர்களும் களப்பணியாற்ற முன்வராத நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினரின் இந்த மனிதாபிமான செயல் அனைத்து தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ளது.

Updated On: 2 Jun 2021 3:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?