/* */

குமரியில் மழையால் சேதமடைந்த பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

குமரியில் கனமழையினால் ஏற்பட்ட வெள்ள சேத பகுதிகளை, மாவட்ட ஆட்சியர் இன்று ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

குமரியில் மழையால் சேதமடைந்த பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த ஆட்சியர் அரவிந்த்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், கனமழையால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், அந்த பகுதிகளை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட கோதையாறு இடது கரை கால்வாய், குற்றியாணி, பொன்மனை- காளிகேசம் சாலை போன்றவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், குமாரகோவில் பச்சைமால் கோணஓடையின் அடிமடையில் ஏற்பட்ட உடைப்பை ஆய்வு செய்த ஆட்சியர் அரவிந்த், மருந்துக்கோட்டை முதல், குமாரகோவில் செல்லும் இடைப்பட்ட வேலிமலை ஓடை உடைப்பு, ஆளுர் முதல் இரணியல் வரையிலான இரயில்வே பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு போன்றவற்றையும் பார்வையிட்டார்.

அத்துடன், கால்வாய் உடைப்பினால் வில்லுக்குறி முதல், பேயங்குழி வரை சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதையும், வேம்பனூர் குளம் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் ஆசாரிபள்ளம் முதல் பெரும்செல்வவிளை வரையிலான துண்டிக்கப்பட்ட சாலை இணைப்புகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Updated On: 17 Nov 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்