/* */

குமரியில் தடைசெய்யப்பட்ட 13 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்

குமரியில் போலீசாரின் சோதனையில் அரசால் தடைசெய்யப்பட்ட 13 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

குமரியில் தடைசெய்யப்பட்ட 13 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்
X

கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனையை தீவிரமாக கண்காணிக்க குமரி மாவட்டத்தில் தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் குளச்சல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சணல் குமார் குளச்சல் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை அருகே குட்கா, புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவலர்கள் சகிதம் அங்கு சென்றார்.

அப்போது அங்கே சந்தேகப்படும்படியாக நின்ற நபரை பிடித்து விசாரணை செய்த போது அவர் குளச்சல் பகுதியை சேர்ந்த ஷேக் முகமது (51) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவரை பிடித்து தீவிர விசாரணை செய்ததோடு அந்த இடத்தை சோதனை செய்த போது அவர் சட்டவிரோதமாக உடலுக்கு கேடு விளைவிக்ககூடிய தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரிடமிருந்த 13 கிலோ குட்கா, புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர், மேலும் அவர் மீது காவல் நிலைய காவல் ஆய்வாளர் அருள் பிரகாஷ் வழக்கு பதிவு செய்தார்.

Updated On: 13 Jan 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்