/* */

மகாராஷ்டிராவில் கரை ஒதுங்கிய மீனவர்கள் - வீடியோ வெளியிட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை

மகாராஷ்டிராவில் கரை ஒதுங்கிய மீனவர்கள், அதிகாரிகள் மிரட்டுவதாக கூறி வீடியோ வெளியிட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

மகாராஷ்டிராவில் கரை ஒதுங்கிய மீனவர்கள் - வீடியோ வெளியிட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை
X

கோப்பு படம்

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த ஜெகன் என்பவருக்கு சொந்தமான ஜெபி என்ற விசைப்படகில் 10 மீனவர்களுடன் கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆள்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். மீனவர்கள் மஹாராஷ்டிரா கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது படகின் ஸ்டீயரிங் உடைந்து படகை இயக்க முடியாமல் போய் உள்ளது.

இதனையடுத்து மீனவர்கள் சேட்டிலைட் போன் மூலம் இந்திய கடற்படையினரிடம் உதவி கோரி உள்ளனர். மீனவர்களின் கோரிக்கையை ஏற்ற இந்திய கடற்படை வீரர்கள் மீனவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று படகின் உடைந்த பாகத்தை தற்காலிகமாக சரிசெய்து கொடுத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து மீனவர்கள் தங்களது படகை முழுமையாக சரிசெய்ய வேண்டி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரெத்தினகிரி துறைமுகத்திற்கு கொண்டு வந்து, உடைந்த பாகத்தை சரி செய்துவிட்டு திரும்பி செல்ல முயன்றுள்ளனர்.

அப்போது அங்குள்ள மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களுடைய படகை கைது செய்து படகில் இருந்த மீன்களை ஏலம் இட போவதாகவும் அனுமதி இல்லாமல் படகு வந்ததால் அதற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறி சிறைப்பிடித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக மீனவர்கள் குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் தமிழக அரசு தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.

Updated On: 15 Feb 2022 1:52 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...