/* */

பள்ளியில் குடிநீர் தட்டுப்பாடு: கேன் குடிநீர் இலவசமாக வழங்கும் ஆசிரியர்கள்

ஆர்பாக்கம் கிராமத்தில் கடந்த ஓரு மாதமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளதால் ஆழ்துளை கிணறுகளை பழுது நீக்கம் பணி தீவிரம்.

HIGHLIGHTS

பள்ளியில் குடிநீர் தட்டுப்பாடு: கேன் குடிநீர் இலவசமாக வழங்கும் ஆசிரியர்கள்
X

ஆர்பாக்கம் கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளை பழுது நீக்கம் செய்த போது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது ஆர்ப்பாக்கம் கிராமம். இங்கு அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக செய்யாற்றில் அமைக்கப்பட்டிருந்த இக்கிராமக் குடிநீர் பைப்புகள் மற்றும் போர்வெல் சிதிலமடைந்ததால் அன்றிலிருந்து குடிநீர் தட்டுப்பாடு அவ்வூரில் இருந்து வருகிறது.

தற்போது கிராமப்பகுதிகளில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறப்படும் நீர் கிராமம் முழுவதும் அளிக்கப்பட்டுள்ளதால் போதிய குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அரசுப் பள்ளிக்கு குடிநீர் இல்லாததால் பள்ளி மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் என பல தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதை கண்டு ஆசிரியர்கள் நாள்தோறும் 20 குடிநீர் கேன்களை வரவழைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு அளித்தும் வருவதாக தெரிய வருகிறது.

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கிராமங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளை பராமரிக்கும் பணியினை கிராம ஊராட்சி மன்றம் துரிதப்படுத்தி விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

பள்ளியில் பயிலும் மாணவர்கள் உடல் நலம் காக்கவும் , தற்போது கோடைகாலம் என்பதால் உடல் நீரிழப்பு குறைபாடுகளை தவிர்க‌ அதிக அளவில் குடிநீர் அருந்த வேண்டும் என்றும் கூறும் நிலையில் குடிநீருக்காக கையில் பாட்டிலுடன் மாணவர்கள் அலைந்து வருகின்றனர்.

Updated On: 23 March 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?