/* */

காஞ்சிபுரம் : ஓரிக்கை மணி மண்டபத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்.

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கான இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : ஓரிக்கை மணி மண்டபத்தில்  இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்.
X

 ஓரிக்கை மகா பெரியவர் மணி மண்டபத்தில் மருத்துவர் சாய்நாதன் தலைமையில் நடைபெற்ற இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்.

காஞ்சிபுரத்தை அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவர் மணிமண்டபத்தில் காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜூலை 24 ஆம் தேதி முதல் வரும் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வரை சாதுர் மாஸ்ய விரதத்தை அனுஷ்டித்து வருகிறார்.

இந்நாட்களில் மணிமண்டபத்துக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அவ்வளாகத்தில் சங்கரா பல்கலைக்கழகத்தின் சார்பில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

ஆயுர்வேத மருத்துவர் சாய்நாதன் தலைமையிலான குழுவினர் இலவசமாக மருத்துவ ஆலோசனைகளும், மருந்துகளும் வழங்கி வருகின்றனர்.

இது குறித்து மருத்துவர் சாய்நாதன் கூறியது:

ஜூலை 24 முதல் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வரை தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச ஆயுர்வேத மருத்துவ முகாமை மணி மண்டப வளாகத்தில் நடத்தி வருகிறோம். வெள்ளி,சனி,ஞாயிறு என வாரத்தில் 3 நாட்கள் மட்டும் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

வெளிநோயாளிகளுக்கு மருந்துகளும், மருத்துவ ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேல்சிகிச்சை தேவைப்படுவோருக்கு மட்டும் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஜெயேந்திர சரஸ்வதி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறோம்.

எனவே பக்தர்கள்,பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்தார்.

Updated On: 13 Aug 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?