/* */

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 304 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

வட மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க காவல்துறை தீவிர கண்காணிப்பு.

HIGHLIGHTS

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 304 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
X

தமிழக அரசால் தடைசெய்யபட்ட பான் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்ட காட்சி. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்து மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அவர்களின் உத்தரவின்படி சோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அதன்பேரில் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் ஆய்வாளர் ராஜா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் அருள்நேசன் மற்றும் காவலர் ரமேஷ் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் ஒரகடம் மேம்பாலம் அருகே உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்தது.

இதனையடுத்து கடைகளில் சோதனை செய்தபோது கிடைத்த பொருட்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் சாலமங்கலம் இப்பகுதியை சேர்ந்த மகேந்திரன் ஒரகடம் பகுதியை சேர்ந்த செல்வம் மற்றும் விக்னேஷ் ஆகியோர் வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 304 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 1.20 லட்சம் என தெரியவருகிறது.


Updated On: 26 May 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  2. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  3. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  4. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  5. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  6. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  7. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  8. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  9. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  10. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்