/* */

திருமணமண்டபம் சார்ந்த தொழில்களுக்கு விதிவிலக்கு அளிக்க கோரிக்கை.

திருமண மண்டப நிகழ்ச்சிகளுக்கு கொரோனா விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்க கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

HIGHLIGHTS

திருமணமண்டபம் சார்ந்த தொழில்களுக்கு விதிவிலக்கு அளிக்க கோரிக்கை.
X

திருவிழாக்கள் , சுப நிகழ்ச்சிகள் என பல பெரும்பாலும் ஏப்ரல், மே , ஜூன் மாதங்களில்தான் அதிக அளவில் மேற்கொள்ளப்படும். குறிப்பாக திருமண நிகழ்ச்சிகள் என்றால் திருமண மண்டபத்தில் உற்றார்‌, உறவினர் , நண்பர்கள் என அனைவரும் மகிழ்ச்சி அளிக்க பல நினைவுகளுடன் நடைபெறும்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திருமண மண்டப நிகழ்வுகளில் இரு வீட்டார் சார்பிலும் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருமணம் என்றாலே மின் அலங்காரம், சமையல் பாத்திரங்கள் ,பூ அலங்காரம்,கலை அலங்காரம் என பலதுறை சார்ந்த தொழிலாளர்கள் சம்பந்தப்படிருப்பார்கள். இதுபோன்ற கட்டுப்பாடுகளால் திருமணம் எளிமையாக நடைபெறும் சூழ்நிலை உருவாகி, இதை சார்ந்த பல ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதார நிலை பெரும் கேள்விக்குறியாகும்.

ஆகவே தமிழக அரசு சினிமா திரையரங்குகள் ஷாப்பிங் மால் போன்றவற்றிற்கு 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதி அளிப்பது போல் திருமண மண்டப விழாக்களுக்கும் அனுமதி அளிக்க கோரி அதை சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தளர்வுகள் அளிக்க பரிந்துரைக்க மனு அளித்தனர்.

Updated On: 19 April 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி பகுதியில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது
  3. வீடியோ
    🔴LIVE : என் அப்பா ஒரு கொத்தனார்!உருக்கமாய் பேசிய காளி வெங்கட்! |...
  4. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே கவிதைகள்..!
  5. வீடியோ
    முதல் நாளே இவ்ளோ வசூலா ? வாரி குவித்த Billa Re-Release !#ajith...
  6. கோவை மாநகர்
    யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது
  7. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  8. ஆன்மீகம்
    மதுரை நகர் கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்