/* */

வைரல் வீடியோ: காஞ்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆய்வு

காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் இந்து திருக்கோயில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அதை மீட்க வாருங்கள் எனும் வீடியோ வைரல் ஆனது.

HIGHLIGHTS

வைரல் வீடியோ: காஞ்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆய்வு
X

காமராஜர் சாலையில் திருக்கோயில் உள்ளதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்திய பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆய்வு மேற்கொண்டபோது.

காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியான காமராஜர் சாலையில் இந்து திருக்கோயில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும் அதனை மீட்க உதவி கோரி ஒரு வீடியோ வைரல் ஆனது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்து ரத்தினவேலு மற்றும் ஆய்வாளர் கிருத்திகா ஆகியோர் இது குறித்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து அப்பகுதியினை நிர்வகித்து வரும் நபர்களிடமிருந்து விளக்கங்களையும் சில தடை ஆணை நகல்களையும் நகல்களையும் பெற்றுச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து அங்கிருந்த நிர்வாகி கணபதி கூறுகையில் , இப்பகுதி சுமார் 20 ஆயிரம் சதுர அடியை கொண்டது எனவும் இது இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை எனவும் இது எங்கள் மூதாதையர்கள் சமாதி அமைந்த இடமும், இதை தனி நபர்கள் வழிபட அனுமதி இல்லை எனவும் புகைப்படங்கள் வீடியோக்களை எடுக்க அனுமதி இல்லை எனவும் தெரிவித்தார்கள். மேலும் இதனை புனரமைக்க கடந்த ஜனவரி 25ஆம் தேதி பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.

இப்பகுதியை கல் மடம் என இவர்கள் தெரிவித்து தெரிவித்தும் லிங்காயத்து எனக்கூறப்படும் பிரிவை சார்ந்தவர்கள் என்றும் தங்கள் பிரிவை சார்ந்தவர்கள் தினந்தோறும் இங்குள்ள ஈஸ்வர லிங்கத்திற்கு பூஜை செய்து வருவதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு முறையான விளக்கங்களை அளித்துள்ளதாகவும் சரியான புரிதல் இல்லாமல் இந்த வீடியோ வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் கூறுகையில், இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும் அவர்கள் தரப்பிலிருந்து விளக்கங்களைப் பெற்று முறையாக இதுகுறித்து தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Updated On: 10 April 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  2. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  3. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  4. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  9. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  10. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்