/* */

அதிசய கிராமமா ஐயங்கார்குளம்?

காஞ்சிபுரம் அடுத்த எட்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ஐயங்கார்குளம் கிராமம்.

HIGHLIGHTS

அதிசய கிராமமா  ஐயங்கார்குளம்?
X

காஞ்சிபுரம் அருகே இப்படி ஒரு அதிசய கிராமமா ? பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டுள்ள ஐயங்கார்குளம் கிராமம். காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் பாலாற்றின் கரையோரம் அமைந்துள்ளது.

இங்கு அமைந்துள்ள ஸ்ரீ சஞ்சீவிராயர் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. முன்னொரு காலத்தில் அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து சென்றபோது அதிலிருந்த ஒரு துளி பாகம் சிதறி இக்கிராமத்தில் விழுந்ததாக ஐதீகம் உள்ளது.

சுமார் 130 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தாது சமுத்திரம் ஏரி

எப்பொழுதும் குளிர்ச்சியான சூழ்நிலையை காணப்படும் இந்த கிராமம் இதற்கு சாட்சியாகவும் அமைந்துள்ளது. ஸ்ரீசஞ்சீவராயர் திருக்கோயில் பின்புறம் சுமார் 130 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது தாது சமுத்திரம் என அழைக்கப்படும் ஏரி வட்ட கோல் வடிவில் அமைந்துள்ளது. இதன் கரைகள் முழுவதும் எந்த ஒரு கன மழையிலும் ஏரி நிரம்பி கிராமத்தில் புகாத வண்ணம் கட்டமைப்புடன் உள்ளது.

இக்குளக்கரையில் அமைந்துள்ள சிற்பங்கள் ஏராளமானது உலகப் புகழ்பெற்ற திருக்கோயில்களின் கருவறை சிலையை ஒட்டியுள்ளது.

ஐயங்கார் குளம் மகாலட்சுமி திருக்கோயில் அமைந்துள்ள பகுதியில் ஏரி கரையில் உள்ள பல்வேறு திருக்கோயில்களின் கருவறை சிற்பங்கள்.

ஸ்ரீதேவி பூதேவியுடன் சயன கோலத்தில் அரங்கநாதர், திருப்பதி வெங்கடாஜலபதி, காஞ்சி வைகுண்டநாதர், நடனமாடும் கிருஷ்ணர், அரச இலையில் கிருஷ்ணர், பாற்கடலில் அமுது கடைவது போல என பல்வேறு சிற்பங்கள் அமைந்தும் இது குறித்த கல்வெட்டுகளும் உள்ளது.

இதுகுறித்து அக்கிராமத்தை சேர்ந்த பாபு மற்றும் அன்பழகன் ஆகியோர் தெரிவிக்கையில், ஐயங்கார் குளம் கிராமம் என்பது மூலிகை செடி அதிகம் உள்ள பகுதி. இதனால் இதன் காற்றை சுவாசிக்கும் பல்வேறு கிராம மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து வருகின்றனர் . இக்கிராமத்தில் எந்த ஒரு மனிதரும் விஷ ஜந்துக்களால் கடித்து இறந்ததாக வரலாறு இல்லை.

இது மட்டும் இல்லாமல் உலக பிரசித்தி பெற்ற அத்தி வரதர் புகழ் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கிராமத்தில் உள்ள பூமி மேல் மட்டத்திலிருந்து 20 அடி ஆழத்தில் உள்ள நடாவிகிணறு எனும் கல் மண்டபத்தில் வருடத்திற்கு ஒருமுறை கோடை வெப்பத்தை தவிர்க்க ஸ்ரீ சஞ்சீவிராயர் கோயிலில் எழுந்தருளி சிறப்பு மூலிகை திருமஞ்சனம் நடத்தப்பட்டு அதன் பின் இங்கு எழுந்தருளி இக்கிணற்றினை வலம் வந்து பக்தர்களுக்கு அருகில் உள்ள கிராமங்கள் வழியாக சென்று பாலாற்றில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இதுபோன்ற பல்வேறு வரலாற்று சிறப்பு மட்டுமில்லாது அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ள இந்த கிராமத்தில் உள்ள அனைத்தையும் அனைவரும் ஒரு முறையாவது பார்க்கும் வகையில் இக்கிராமம் அவர்களை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

Updated On: 2 May 2023 5:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  2. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  3. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  4. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  5. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  7. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  9. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்