/* */

முதல்முறையாக பழங்குடியின மக்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா.

விப்பேடு வளர்புரம் கிராம பழங்குடியின குடியிருப்பு வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி மன்ற தலைவர் வசந்திஅருள் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

முதல்முறையாக பழங்குடியின மக்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா.
X

காஞ்சிபுரம் அடுத்த விப்பேடு ஊராட்சி ஒன்றியத்திற்குபட்ட வளர்புரம் பழங்குடியினர் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்ட போது.

தமிழகத்தில் பொங்கல் திருநாள் இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் சமத்துவபுரம் உள்ள பகுதிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு அதற்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து உள்ளார்.

இந்நிலையில் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் தத்தமது பகுதிகளில் சமத்துவ பொங்கல் விழாக்களை ஊராட்சிகளில் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக நரிக்குறவர், பழங்குடியினர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தேர்வு செய்து அனைவரும் ஒருங்கிணைந்து சமத்துவ பொங்கல் விழா நடத்தி அப்பகுதி மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விப்பேடு ஊராட்சியில் உள்ள வளர்புரம் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் பல ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர். அவ்விடத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடடுவது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் வசந்த் அருள் ஊராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து அதற்கான ஏற்பாடுகள் செய்தார்.


இந்நிலையில் காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர் கொடிகுமார், ஒன்றிய கவுன்சிலர் தேவபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுடன் புதுப்பானையில் பச்சரிசி, வெல்லம் , முந்திரி , திராட்சை இட்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். அதன்பின் பொங்கல் பொங்கியதும் பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சி குரலிட்டு மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாடினர்.

பின்னர் கிராம பகுதி மக்களுக்கு புத்தாடை கரும்பு உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது.அதன் பின் பொங்கலிட்ட பொங்கலை படையலிட்டு அனைவரும் ஒன்று கூடி வழிபட்டனர்.

இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி அருள், துணைத் தலைவர் மேகலா நவீன்குமார் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் நவீன் சுசீலா முருகன் மணிகண்டன் சபரீஷ்வரன் சோனியா மற்றும் திமுக நிர்வாகிகள் ஊர் மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


தங்கள் வாழ்நாளில் முதல் முறையாக அனைத்து தரப்பு மக்களிடம் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடியது பெரும் மகிழ்ச்சி அளிப்பது தங்கள் குழந்தைகளுக்கு இது பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. எங்களுடன் அனைத்து தரப்பினரும் ஒன்றுகூடி பொங்கலிட்டு பொங்கல் விழா கொண்டாட இதுவே முதல் முறையாகும் இதனால் எங்கள் சமூகத்தினர் மிகுந்த மகிழ்ச்சி எல்லாம் ஆனந்துடன் உள்ளனர் எனவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்

Updated On: 12 Jan 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...