/* */

காஞ்சிபுரம் மாநகர பகுதி கழக நிர்வாகிகள் தேர்தலில் வேட்பு மனு வழங்கல்

காஞ்சிபுரத்தில் தேர்தல் ஆணையர் ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் வேட்பு மனு வழங்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

Election News 2022 | DMK News
X

காஞ்சிபுரம் தி.மு.க. நகர மண்டல பொறுப்பாளர் பதவிக்கான தேர்தலில் வேட்புமனுவினை நிர்வாகிகள் பெற்றனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15 ஆவது உட்கட்சி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் மாநகரத்தில் நான்கு மண்டல பகுதிகள் உள்ளன.

இதற்கான பகுதி கழக நிர்வாகிகள் தேர்தல் வேட்பு மனு வழங்கல் & தாக்கல் இன்று மாவட்ட கழக அலுவலகமான, காஞ்சிபுரம் அண்ணா பவள விழா மாளிகையில் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் மாநகர மண்டல தேர்தல் நடத்த , தலைமை கழகத்தால் தேர்தல் ஆணையளாராக தலைமை கழக பிரதிநிதி ஈரோடு கே.ஈ. பிரகாஷ் அறிவிக்கபட்டார்.

இவரிடம் வேட்பு மனுக்களை தலைமைக் கழகம் அறிவித்துள்ள உரிய கட்டணம் செலுத்தி மனு பெற்றுக் கொள்ளாலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்புமனு வழங்கும் நிகழ்ச்சி காலை 10மணிக்கு துவங்கியது.

இதனை பெற்று பூர்த்தி செய்து மாலை 4.30 மணிக்குள் வழங்க அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது.

வேட்பு மனு வழங்கல் நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக், துணை அமைப்பாளர் யுவராஜ், உத்தரமேரூர் ஓன்றிய செயலாளர் ஞானசேகரன் , மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சி.கே.வி.தமிழ்செல்வன் , உத்தரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார் , மாமன்ற உறுப்பினர் சுரேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Updated On: 21 July 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  3. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  4. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  5. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  6. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  8. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  9. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!