/* */

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடை பிடிக்காத கடைக்கு சீல் : ஆட்சியர் எச்சரிக்கை

வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் வாடிக்கையாளரை கடைக்குள் அனுமதித்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடை பிடிக்காத கடைக்கு சீல் : ஆட்சியர் எச்சரிக்கை
X

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரின் எச்சரிக்கை விளம்பர பதாகை

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் நகர் முழுவதும் விளம்பரப் பதாகைகள் நிறுவப்பட்டுள்ளது.

இதில் நமது நாட்டின் பல பகுதிகளில் ஓமிக்கிரான் வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் விதமாக காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கடைகள் , வணிக நிறுவனங்கள் , பட்டு விற்பனை கடைகள் தங்கள் நிறுவனத்தின் முன்பு வெப்ப பரிசோதனைக் கருவி, கை சுத்திகரிப்பான், முகக்கவசம் முதலியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்ள வேண்டும்

முகக் கவசம் அணியாத சமூக விலகளை கடைப்பிடிக்காத வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன் கடைகள் , வணிக நிறுவனங்களை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 Jan 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  4. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  5. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  6. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  7. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  9. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  10. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...