/* */

காஞ்சி பாலாற்றில் முடவன் முழுக்கு சிவபூஜை விழா

காஞ்சி ஸ்ரீ திருஞானசம்பந்தர் இறைப்பணி மற்றும் உழவாரப்பணி அறக்கட்டளை சார்பில் காஞ்சி பாலாற்றில், முடவன் முழுக்கு சிவபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது.

HIGHLIGHTS

காஞ்சி பாலாற்றில் முடவன் முழுக்கு சிவபூஜை விழா
X

காஞ்சிபுரம் மேல் பாலாற்றில் நடைபெற்ற முடவன் முழுக்கு பூஜையில், திருநங்கை கஜலட்சுமி தனது குழுவினருடன் சிவ பூஜை மேற்கொண்டார். 

பன்னிரெண்டு ராசிகளில் துலாம் ராசிக்குரிய மாதம், ஐப்பசி மாதம் ஆகும். ஐப்பசியில் நதியில் ஸ்நானம் செய்தால், நம் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு, புண்ணியம் பெறலாம்.

அதேபோல், நம் நாட்டில் பாயும் நதிகளில் கங்கா, யமுனா, சரஸ்வதி, சிந்து, நர்மதா, கோதாவரி, காவிரி ஆகிய ஏழு நதிகளும் பாரத நாட்டிற்கு வளம் சேர்க்கிறது. அதேபோல் வடக்கே ஆறு நதிகளும், தெற்கே காவிரியும் வளம் சேர்க்கிறது.

புண்ணிய பூமி எனக் கூறப்படும் ராமேஸ்வரத்தில், ஒரு முடவன் வசித்து வந்தார். அவருக்கு வெகுநாட்களாக காவிரியில் ஐப்பசி துலாம் ஸ்நானம் செய்து முக்தி அடைய வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. ஐப்பசி முதல் நாள் காவிரி நோக்கி பிரயாணம் செய்தார் பல நாட்கள் தவழ்ந்து ஐப்பசி நிறைவு நாளன்று இரவு, மயிலாடுதுறை ஸ்ரீ மயூரநாதர் திருக்கோவிலை அடைந்தார்.

மிகவும் வருத்தத்துடன் சாமியை நினைத்து கோயிலிலே தூங்கி விட்டார். மயூரநாதர் சுவாமி முடவன் கனவில் தோன்றி, 'துலாம் ஸ்தானம் முடிந்தாலும் பரவாயில்லை, இப்பொழுதே நீ போய் காவிரியில் ஸ்நானம் செய்' என கூறி மறைந்தார்.

அப்போது திடீர் என எழுந்த முடவன் உடனடியாக காவிரியில் ஸ்நாணம் செய்த போது பிரம்ம முகூர்த்தமாக இருந்ததால் சுவாமியும் அம்பாளும் ரிஷபாரூடராக தோன்றி முடவன் ஊனக் குறையும் மனக்குறையும் நீக்கி அருள் செய்ததால் அன்று முதல் ஐப்பசி நிறைவும் , கார்த்திகை முதல் நாள் அனைத்து ஆறுகளிலும் சிவ பக்தர்கள் மணலால் சிவலிங்கம் செய்து ஸ்நாணம் செய்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அவ்வகையில் காஞ்சி மேல் பாலாற்றில் ஸ்ரீ திருஞானசம்பந்தர் இறை பணி மற்றும் உழவாரப்பணி அறக்கட்டளை சார்பில் முடவன் முழக்கு சிவ பூஜை விழா சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.

பாலாற்றில் நடுவில் மணலால் சிவலிங்கம் உருவாக்கப்பட்டு ருத்ராட்ச மாலைகள் அணிவித்து மயில் பூஜை செய்வது போல் வடிவமைக்கப்பட்டது. உடன் ஸ்ரீ மயிலை கபாலீஸ்வரர் திருக்கோலத்தில் அம்பாளுடன் எழுந்தருள விநாயகர் , முருகர் மற்றும் சண்டிகேஸ்வரர் என ஒரே இடத்தில் சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது.

முதலில் கோ பூஜையுடன் தொடங்கி , கன்னி பூஜை , சுமங்கலி பூஜை உள்ளிட்ட பத்து வகை பூஜை மேற்கொள்ளப்பட்டு அதன் பின் சிறப்பு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதங்களும் அன்னதானங்களும் வழங்கப்பட்டது.

இதேபோல் பல்வேறு சிவ பக்தர்களும் தங்கள் குடும்பத்தினருடன் பாலாற்றில் நீராடி சிறிய மணல் சிவலிங்கம் அமைத்து பூஜைகள் மேற்கொண்டு வழிபட்டனர். புஞ்சைஅரசன்தாங்கல் பகுதியை சேர்ந்த திருநங்கைகள் கஜலட்சுமி தலைமையில் பத்துக்கு மேற்பட்ட திருநங்கைகள் முடவன் முழுக்கு பூஜையை பக்தியுடன் மேற்கொண்டு வழிபட்டு பிரசாதங்கள் வழங்கினர்.

Updated On: 17 Nov 2022 9:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  3. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  4. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  5. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  6. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  7. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  8. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
  9. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  10. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!