/* */

தவணை சீட்டில் ₹35லட்சம் மோசடி,எஸ்.பி அலுவலகத்தில் குவிந்த வாடிக்கையாளர்

காஞ்சிபுரத்தில் தவணை சீட்டில் ரூ 35 லட்சம் மோசடி செய்து விட்டதாக எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுக்க குவிந்த பொதுமக்கள் கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

தவணை சீட்டில் ₹35லட்சம் மோசடி,எஸ்.பி அலுவலகத்தில் குவிந்த வாடிக்கையாளர்
X

தவணைத் திட்டத்தில் ரூ35 லட்சம் மோசடி நடந்ததாக கூறி காஞ்சிபுரம் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுக்க குவிந்த பொதுமக்கள் கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள மாஸ்டர் மாணிக்கம் தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சுகுணாவுடன் இணைந்து இப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தவணை திட்டத்தில் தீபாவாளி பொருட்கள்,நகை தருவதாக கூறியுள்ளார்.

இதனை நம்பி கடந்த 2019முதல் பணம் செலுத்தியுள்ளனர்.இத்திட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இதுவரை ஒருவருக்கு கூட பணமோ பொருளோ அளிக்கவில்லை. காவல்துறையில் புகார் அளித்தும் வழக்குப்பதிவு செய்து எந்தவித அச்சமுமின்றி உலவி வருகிறார்.

இதைக் கண்ட வாடிக்கையாளர்கள் அவரிடம் பலமுறை கேட்டும் அலட்சியம் காட்டி இதை தொடர்ந்து இன்று 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுவரை 100 நபர்களிடம் இருந்து 35 லட்ச ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தெரியவருகிறது.

Updated On: 26 July 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!