/* */

சேதமடைந்து வரும் காஞ்சி சர்வ தீர்த்த குளத்தை சீரமைக்கக் கோரிக்கை

சேதமடைந்து வரும் காஞ்சி சர்வ தீர்த்த திருக்குளத்தை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் பல நூறு கோவில்களை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட , வெளிமாநில பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் அரக்கோணம் சாலையில் அமைந்துள்ளது சர்வ தீர்த்த திருக்குளம். இக் குளத்தில் நீராடிய பின் காஞ்சி ஏகாம்பர நாதரை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால் இக்குளத்தில் மிதக்கும் குப்பை கழிவுகளை கண்டு பக்தர்கள் இதை பின்பற்றுவதில் சுணக்கம் காட்டி தவிர்த்து வருவதும் வாடிக்கையாகவே உள்ளது.

திருக்குளத்தின் நடுவில் அமைந்துள்ள நீராழி மண்டபத்தின் மேற்கூரையில் செடிகள் முளைத்து கற்கள் பெயர்ந்து தகரும் நிலையில் உள்ளது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்திருக்குளம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் கட்டுப்பாட்டில் உள்ளது இதை பராமரிக்க வருடம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒப்பந்ததாரர்களுக்கு அளித்து வருவதாகவும் தெரிய வருகிறது. இதை ஒப்பந்ததாரர் பணம் மட்டுமே பெற்றுக்கொண்டு பராமரிப்பு என்பது எள்ளளவும் செய்யவில்லை என்பது தெரிய வருகிறது .

ஆகவே திருக்குளத்தை முறையாக கோயில் நிர்வாகம் பராமரிக்க வேண்டும் எனவும் நீராழி மண்டபத்தில் முளைத்திருக்கும் செடிகளை அகற்றி மண்டபத்தை பழமை மாறாமல் காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் இந்து சமய அறநிலையத் துறைக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 16 Oct 2021 6:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?