/* */

காஞ்சிபுரத்தில் குடியரசு தின விழா கோலாகலம்.

74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் குடியரசு தின விழா கோலாகலம்.
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா காவல் அரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஆட்சியர் ஆர்த்தி ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்ட போது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.


காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 26 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களும், சிறப்பாக பணிபுரிந்த 117 காவல் துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.


74-வது குடியரசு தினா விழாவில் அரசு துறை சார்பில், 112 பயனாளிகளுக்கு ரூ.2,03,51,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் முன்னாள் படைவீரர் அலுவலகம் மூலம் 4 நபர்களுக்கு வருடாந்திர பராமரிப்பு மானியம், மற்றும் கல்வி உதவித்தொகையாக ரூ.1,25,000/-மதிப்பிலும்,

மாவட்ட தொழில் மையத்தின் சார்பாக, 3 நபர்களுக்கு ரூ.1,75,000/- மதிப்பில் பட்டுச்சோலை வியாபாரம், மளிகைக்கடை, காகிதக்கூழ் பொம்மை உற்பத்தி மேற்கொள்ள உதவித் தொகையும்,

தாட்கோ மூலம் 4 நபர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகையாக ரூ. 28,000/- மதிப்பிலும்,

வேளாண்மை பொறியில் துறை சார்பில் 6 நபர்களுக்கு ரூ.5,10,000/- மதிப்பிலான பவர் டில்லரும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 20 நபர்களுக்கு ரூ.1,50,00,000/- மதிப்பிலான குடியிருப்பு ஆணையையும்,

வருவாய் துறை சார்பில் 71 நபர்களுக்கு ரூ.35,53,000/- மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் ஆதரவற்ற விதவை உதவித்தொகையும்,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 4 நபர்களுக்கு ரூ.9,60,000/- மதிப்பில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு ஓதுக்கீடு ஆணையையும் என 112 பயனாளிகளுக்கு ரூ.2,03,51,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, போக்குவரத்து துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, மற்றும் பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 335 அரசு அலுவலர்களுக்கும், 25 ஆண்டுகள் பணி முடித்தமைக்கான 4 நபர்களுக்கும் நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கி சிறப்பித்தார் .

இந்நிகழ்ச்சியின் போது காவல் துறை சரக துணைத் தலைவர் பகலவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Jan 2023 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  3. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  4. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  5. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  7. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  9. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  10. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...