/* */

சாலை அடையாள குறியீடுகள் தயாரிப்பு நிறுவனத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

ஒரகடம் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் சாலைகளில் அமைக்கப்படும் அடையாள குறியீடுகள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

சாலை அடையாள குறியீடுகள் தயாரிப்பு  நிறுவனத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
X

காஞ்சிபுரம் அருகே சாலையில் அமைக்கப்படும் குறியீடுகள் தயாரிப்பு நிறுவனத்தில் அமைச்சர் எ.ப.வேலு ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் பகுதியில் உள்ள சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படும் அடையாள குறியீடுகள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இத்தொழிற்சாலையில், நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படும் சோலார் ஒளிர்வு சாதனங்கள்,ஒளி உமிழ்வான்கள், எச்சரிக்கை பலகைகள், அறிவிப்பு பலகைகள், வேக அளவு குறித்து அறிவிப்பு பலகைகள், சிக்னல்கள் உள்ளிட்ட சாலைகளில் பயன்பபடுத்தப்படும் அடாயாள குறியீடுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இங்கு உற்பத்தி செய்யப்படும் அடையாள குறியீடுகள் தான் தமிழக நெடுஞ்சாலைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நெடுஞ்சாலைகளில் பயன்படுத்தப்படும் இந்த அடையாள குறியீடுகள் உற்பத்தி செய்யும் எஸ்.பி.ஏ., தொழிற்சாலையை தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு நடத்தி தரமான அடையாள குறியீடுகளை உற்பத்தி செய்வது குறித்து தொழிற்சாலை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது இங்கு தயாரிக்கப்படும் அடையாள குறியீட்டு பலகைகள் தான் சாலைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

மனித உயிர்கள் மிகவும் விலைமதிப்பற்றது எனவே நீங்கள் உற்பத்தி செய்யும் அடையாள குறியீடுகளை மேலும் தரமானதாக தயாரிக்க வேண்டும் என தொழிற்சாலை நிர்வாகத்திற்கு அறிவுருத்தினார்.

Updated On: 26 July 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...