/* */

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் மனு

சித்தனக்காவூர் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க கோரி எம்எல்ஏ சுந்தரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் மனு
X

சித்தனக்காவூர் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க கோரி எம்எல்ஏ சுந்தரிடம் மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது சித்தனக்காவூர் கிராமம். இக்கிராமத்திற்கு கடந்த மாதம் நடந்த ஊராட்சி மன்றத் தேர்தலில் அப்பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராகவும் உடன் வார்டு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஊராட்சி மன்ற கட்டிடம் இல்லாமல் அவதியுற்று நிலையில் தனியார் தொண்டு அமைப்பின் மூலம் கட்டப்பட்ட கட்டிடத்தை கிராம ஊராட்சி மன்ற பயன்பாட்டிற்கு தர முன்னாள் தலைவர் முன்வரவில்லை.

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் தலையிட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட ஏற்பாடு செய்தார். இன்று அதன் துவக்க விழாவும் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழாவும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர். க.சுந்தர் தலைமையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பின் அப்பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிட பொதுமக்கள் தங்கள் நீண்ட நாள் கோரிக்கையான இலவச வீட்டு மனை பட்டா மற்றும் அரசு தொகுப்பு வீடு வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்ய கோரிக்கை மனு ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர் செல்வத்துடன் இணைந்து அளித்தனர்.

மனுவைப் பரிசீலித்து உரிய நேரத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போதைய மக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் பிடிஓ பாலாஜி மற்றும் திமுக பிரதிநிதிகள் , பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Dec 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  4. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  5. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  6. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  7. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  9. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  10. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!