/* */

மாத தவணை கட்டலன்னா ஒரு நாளைக்கு ரூ.1000த்துக்கு ரூ.20வட்டி : சுய உதவி குழு தலைவி தடாலடி ஆடியோவால் பரபரப்பு

தவணை முறையாக கட்டத் தவறினால் நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கு ரூ 20 வட்டி என கட்டு வேண்டும் என மகளிர் குழு உறுப்பினர்களிடம் கறாராக பேசும் குழு தலைவியின் ஆடியோ காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

மாத தவணை கட்டலன்னா ஒரு நாளைக்கு  ரூ.1000த்துக்கு  ரூ.20வட்டி : சுய உதவி குழு தலைவி  தடாலடி ஆடியோவால் பரபரப்பு
X

மகளிர் வளர்ச்சி மாதிரி படம் 

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தங்கள் குடும்ப நிதி நிலையை கருத்தில் கொண்டு பெறப்பட்ட கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஏஜன்சிகள் , நிறுவனங்கள் போன்றவைகள் கடன் வசூலிப்பதில் கறார் காட்ட கூடாது என அரசு தெரிவித்தது.

இந்நிலையில் ஓரிக்கை வசந்தம் நகரில் செயல்படும் மகளிர் சுய உதவி குழுவில் உள்ள 30 உறுப்பினர்களுக்கு குழுவின் தலைவி கவிதா ராஜேந்திரன் ஆடியோ ஒன்றை வாட்ஸ்அப் குழுவில் அனுப்பி உள்ளார். அதில் தாங்கள் பெற்ற கடனை 15ம் தேதி மாலை 5 மணிக்குள் செலுத்தாவிடில் ஆயிரம் ரூபாய்க்கு அபராத வட்டியாக நாளொன்றுக்கு 20 , 40 என கூடுதலாக செலுத்த வேண்டும் எனவும் இதில் எந்தவித சமரசமும் இல்லை என கூறி அனுப்பி உள்ளார்.

அரசு அறிவுறுத்தியும் இதுபோன்று மகளிர் சுய உதவிக்குழு தலைவியே இப்படி ஒரு ஆடியோ வெளியிட்டு இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 15 Jun 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?