/* */

வடக்கா ? தெற்கா ? மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற போவது யார் ? .

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற போவதில் திமுக வடக்கா அல்லது தெற்கு மாவட்டதினரா என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த 12ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு திமுக கூட்டணியில் போட்டியிட்ட 11 நபர்களும் வெற்றி பெற்றனர். இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் 6உறுப்பினர்களும் , வடக்கு மாவட்டத்தில் 5 உறுப்பினர்களும் அடங்குவர்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒருவரும் , மதிமுக சார்பில் ஒருவரும் , காங்கிரஸ் சார்பில் ஒருவரும் உள்ளனர்.

இந்நிலையில் தலைவர் பதவிக்கு வடக்கு மாவட்ட திமுகவை சேர்ந்த படப்பை மனோகரனும் , தெற்கு மாவட்டத்தை சேர்ந்த நித்யா சுகுமாரும் ஆகியோருடையே கடும் போட்டி நிலவுகிறது.

நாளை தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளதால் திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 21 Oct 2021 9:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  5. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  6. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  7. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  8. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  9. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  10. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்