/* */

காஞ்சிபுரத்தில் தேமுதிக முரசு சத்தம் கேட்கவில்லை

எதிர்க் கட்சியாக விளங்கிய தேமுதிக சார்பாக தற்போது மாநகராட்சி தேர்தலில் போட்டியிட ஒருவர்கூட வேட்புமனு செய்யவில்லை

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் தேமுதிக  முரசு சத்தம் கேட்கவில்லை
X

பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயகாந்த்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநகராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் போட்டியிட விரும்புபவர்கள் தங்கள் வேட்பு மனுக்களை கடந்த வெள்ளி முதல் இன்று மாலை 5 வரை தாக்கல் செய்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 பதவிகளுக்கு 409 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது. நாளை வேட்புமனு பரிசீலனை செய்யப்பட உள்ளது.

பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் மாநகராட்சி பதவிகளுக்கான போட்டியில் 51 இடங்களில் திமுக நாற்பத்தி இரண்டு இடங்களையும், அதிமுக 45 இடங்களையும், பிற கட்சிகளான பாமக, பாஜக, நாம் தமிழர் போன்றோர் 30க்கும் மேற்பட்ட இடங்களிலும், கம்யூனிஸ்ட் மூன்று இடங்களிலும் போட்டியிடுகிறது. தமாகா 4மேற்பட்ட இடங்களில் போட்டியிடுகிறது. மனிதநேய மக்கள் கட்சி , முஸ்லிம் லீக் ஆகியவை ஓரிரு இடங்களில் போட்டியிடுகிறது.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக மெல்ல தேய்ந்து தற்போது நடைபெறும் மாநகராட்சித் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரத்தில் ஒரு வார்டுகளில் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

பல சுயேச்சைகள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், அவர்களை கூட தங்கள் முரசு சின்னத்தில் கேட்டிருந்தால் கூட சாத்தியமாகி இருக்கலாம்.

சிறிய கட்சிகள் கூட ஓரிரு இடங்களில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் முரசு சத்தமே கேட்கவில்லை என்ற பரிதாபநிலை உள்ளது.

Updated On: 4 Feb 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  2. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  4. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்
  5. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  6. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  7. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  8. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  9. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  10. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!