/* */

காஞ்சிபுரம் சரக புதிய டிஐஜியாக பொன்னி பதவி ஏற்பு..!

காஞ்சிபுரம் சரக. டிஐஜியாக பதவி ஏற்க வந்த பொன்னிக்கு எஸ்.பிக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் சரக புதிய டிஐஜியாக பொன்னி பதவி ஏற்பு..!
X

காஞ்சிபுரம் சரக டிஐஜியாக பதவியேற்றுக் கொண்ட ஆர்.பொன்னி.ஐ.பி.எஸ்.

காஞ்சிபுரம் சரக டிஐஜியாக ஆர்.பொன்னி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவரை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு எஸ் பிக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

கடந்த 4ம் தேதி தமிழக முதன்மை செயலாளர் அமுதா காவல்துறையின் உயர் அதிகாரிகள் 27 பேர் இடம் மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியிட்டார். இதில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை துணைத் தலைவராக பணிபுரிந்து வந்த பகலவன் திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த இடத்திற்கு மதுரையில் டிஐஜியாக பணிபுரிந்து வந்த ஆர்.பொன்னி.ஐ.பி.எஸ் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் உள்ள காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் பதவி ஏற்க வந்த அவரை காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர், செங்கல்பட்டு எஸ்.பி சாய்பிரிநீத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன்பின் காவல்துறையின் மரியாதையை ஏற்று அதன்பின் தனது அலுவலகத்தில் காலையில் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் காவல் துறையின் பல்வேறு மாவட்டங்களிலும் உயர் பதவி பெற்று சிறப்பாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளாக காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகள் உள்ளது. காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்ட பகுதிகளில் அதிக அளவு தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை தொழிற்சாலைகளில் உள்ள கழிவுகளை எடுக்கக் கடும் போட்டி நிலவி வரும் நிலையில் , இதன் காரணமாக போட்டிக் கொலைகளும் நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்திலும் இதே போன்ற நிலை நீடித்து வருவது சரக டிஐஜி க்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

மேலும் காவல் நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்களையும் நிரப்பி பொதுமக்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் நோக்கில் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவரது பதவி ஏற்பு, இந்த மாவட்டங்களில் குற்றச் சம்பவங்களைக் குறைக்கும் வகையில் நடவடிக்கை தீவிரமாக இருக்கும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.

Updated On: 9 Aug 2023 4:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  8. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  9. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  10. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த