/* */

அரசு பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

கீழ்கதிர்பூர் அரசு நடுநிலைப் பள்ளியில் பெண் மருத்துவர் சங்கம் சார்பில் மருத்துவர் நிஷாபிரியம் மாணவிகளுக்கு தற்காத்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

HIGHLIGHTS

அரசு பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

தேசிய பெண் குழந்தைகள் தினத்தினையொட்டி  கீழ்கதிர்பூர் அரசு நடுநிலைப் பள்ளியில் மருத்துவர் நிஷா பிரியன் தற்காத்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உரையாற்றிய போது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 2008 ஆம் ஆண்டு தேசிய பெண் குழந்தைகள் தினத்தை துவக்கியது. இது நாட்டில் பெண்கள் சந்திக்கும் ஏற்றத்தாழ்வுகளை விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும், பெண் குழந்தைகளின் உரிமைகள் பற்றி அனைவருக்கும் கல்வி கற்பதற்கும் முக்கிய குறிக்கோளாக இருந்தது வருகிறது.

தற்போதைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு இது போன்ற விழிப்புணர்வுகள் அவசியம் என்பதால் இந்த ஆண்டு மிகச் சிறப்பாக தேசிய பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாட மத்திய மாநில அரசுகள் முடிவு செய்து இதற்கான விழிப்புணர்வுகளை அதிக அளவில் ஏற்படுத்த திட்டமிட்டது.

தற்போது பெண் குழந்தைகளிடம் பாலியல் புணர்ச்சியாளர்களிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் ஆசிரியர்கள் மட்டுமல்ல அதை பெற்றோர்களும் அவர்களுக்கு அவ்வப்போது எடுத்துரைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் பெண் மருத்துவர் சங்கம் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழாவில் அதிகளவு அரசு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.

அவ்வகையில் கீழ்கதிர்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க மகளிர் மருத்துவர்கள் அணியின் சார்பில் டாக்டர் நிஷாபிரியம் தலைமையில் தேசிய பெண்குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்பட்டது.


.தேசிய பெண்குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் குறித்து காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் மரு.சு.மனோகரன் விரிவாக எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினராக இந்திய மருத்துவ சங்க மாநில துணை தலைவர் மரு.பி.டி.சரவணன் கலந்து கொண்டு தேசிய பெண் குழந்தைகள் தினம் குறித்து நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க மகளிர் மருத்துவர்கள் அணித் தலைவர் மரு. நிஷாப்ரியா செய்திருந்தார்.

இதில் உரையாற்றிய மருத்துவர் நிஷா பிரியம், பெண் குழந்தைகள் தங்களை எவ்வாறு தற்காத்து கொள்ளுதல் குறித்த விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்றவாறு கூறி, அதனை மனதில் பதியுமாறு எடுத்துரைத்தது அனைவரின் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுபோன்று காஞ்சிபுரம் மாநகரை சுற்றியுள்ள பெண்கள் பள்ளியில் இதுகுறித்த விழிப்புணர்வு மருத்துவர்கள் சங்க பெண்கள் அணி சார்பில் ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பொருளாளர் மரு.ஞானகணேஷ், மற்றும் முன்னாள் தலைவர்கள் மரு.விக்டோரியா, மரு.லஷ்மி ,மரு. பொன். ஆதிரை மற்றும் இதர மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Jan 2023 1:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  2. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  3. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  4. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  5. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  7. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  8. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  9. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  10. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!