/* */

வீட்டின் முன் உணவு கேட்டு தர்ணா செய்யும் குரங்குகள், பொதுமக்கள் வெளியே வர அச்சம்

காஞ்சிபுரம் மாகரல் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குரங்குகள் வீட்டுக்கு முன் அமர்ந்து உணவு கேட்டு தர்ணா செய்கின்றன, மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

வீட்டின் முன் உணவு கேட்டு தர்ணா செய்யும் குரங்குகள், பொதுமக்கள் வெளியே வர அச்சம்
X

காஞ்சிபுரம் அருகே உணவு கேட்டு வீடுகளை சூழ்ந்துள்ள குரங்குகள்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் மாகரல் கிராமம் உள்ளது. இங்குள்ள பழைமையான சிவன் , விஷ்ணு மற்றும் சமண ஆலயங்கள் மிகவும் ஆன்மீக புகழ்பெற்றது.

இக்கிராமத்தில் 50 சதவீத வீடுகள் பழைய ஓடுகளால் வேயபட்டு கோடை , குளிர் காலங்களுக்கு ஏற்றவாறு இருப்பது சிறப்பான ஒன்று.

இந்நிலையில் இக்கிராமத்தில் கடந்த மூன்று மாத காலமாக 100க்கும் மேற்பட்ட குரங்குகள் கோயில் கோபுரங்களில் தங்கி அவ்வப்போது சாலை மற்றும் வீடுகளில் புகுந்து பொதுமக்களை அச்சமடைய செய்கிறது.

இதுமட்டுமில்லாமல் வீடுகளில் உள்ள ஓடுகளை பாழ்படுத்துவதால் புணரமைக்க பல ஆயிரக்கணக்கான பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.

உணவு கேட்டு வீட்டு வாசலில் கூட்டமாக தர்ணா போராட்டம் போல் செய்வதால் பொது மக்கள் வெளியே வர அச்சமடைந்துள்ளனர்.

குரங்கு சில சமயங்களில் தாக்கவும் முயற்சிப்பதால் வனத்துறையினர் தக்க நடவடிக்கை பிடிக்க குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 28 July 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  2. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  3. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  5. ஈரோடு
    ஈரோடு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு
  6. ஈரோடு
    ஈரோட்டில் தனியார் தொண்டு அமைப்பு முயற்சியால் வேருடன் பிடுங்கி நடப்பட்ட...
  7. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  8. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  9. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  10. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்