/* */

அம்மன் கோவிலுக்கு மேல் பூட்டு: பக்தர்கள் 4 மணி நேரமாக காத்திருப்பு

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தும்பவனம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ தும்பவனத்து அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

HIGHLIGHTS

அம்மன் கோவிலுக்கு மேல் பூட்டு: பக்தர்கள் 4 மணி நேரமாக காத்திருப்பு
X

பூட்டுப்போடப்பட்ட தும்பவனத்து அம்மன் கோவில்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 49 வது வார்டு பகுதி தும்பவனம்.இங்கு பல ஆண்டுகளாக அப்பகுதி மக்களால் ஸ்ரீ தும்பவனத்து அம்மன் ஆலயம் அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களால் வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆடி மாதம் அல்லது அனைத்து நாட்களிலும் தங்கள் குலதெய்வமாக இதனை பல ஆயிரம் மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து பொங்கலிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மேற்கொண்டு வழிபாடு செய்து வருவது வழக்கம் .

கடந்த 10 ஆண்டு காலமாக முன்னால் நகர மன்ற உறுப்பினர் குணசீலன் என்பவர் இக்கோயிலில் நிர்வகித்து வந்தார்.

தற்போது திமுக ஆட்சி ஏற்ற பின் தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களையும் நிர்வகிக்க அறங்காவலர் குழுக்கள் அமைக்கும் பணியை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அப்பகுதியை சேர்ந்த திமுக உறுப்பினர்கள் பெரும்பான்மையும் , அவருக்கு ஆதரவாக உள்ள ஆட்களையும் அறங்காவலர் குழுவில் சேர்க்க விண்ணப்பம் செய்து அதன் பேரில் தற்போது சிறிது சிறிதாக அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ஸ்ரீ தும்பவனுத்து அம்மன் ஆலயத்தில் நேற்று வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு கோவில் பூசாரி கோயிலை பூட்டிவிட்டு வீடு திரும்பி உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்வேறு பகுதிகளில் சேர்ந்த பக்தர்கள் தங்களது குல வழிபாட்டிற்காக சிறப்பு அபிஷேகம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.

இதற்காக இன்று கோயில் பூசாரி திருக்கோயிலுக்கு வந்த போது கோயில் நுழைவு வாயில் பூட்டின் மேல் மற்றொரு மேல் போட்டு இருந்ததை கண்டு இதுகுறித்து நிர்வாகி இடம் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் வழிபாட்டுக்கு வந்த பக்தர்களும் கோயில் திறக்காதது குறித்து கேட்டபோது சம்பவம் தெரிவிக்கப்பட்டது இதனால் பக்தர்கள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை கோயில் முன்பே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

மேலும் இதுகுறித்து காவல்துறை இந்து சமய அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவித்தும் நீண்ட நேரமாக வராததால் அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் அப்பகுதியில் ஒன்று கூடியுள்ளனர்.

மேலும் கருவறை முன் உள்ள கதவு அருகே பெரியார் சிலை , படத்தினை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வணங்குவது போன்றும் , வன்னியர் சங்க தலைவர் மறைந்த குரு படம், வன்னியர் சங்கத்தின் முத்திரை வாள் தீச்சட்டி முத்திரை போன்ற கொண்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது. இத் திருக்கோவிலுக்கு புதியதாக அறங்காவலர்களாக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து அறங்காவலர்கள் என ஜி.விமல்தாஸ் மற்றும் சண்முக நாயக்கர் எனும் பெயரிடப்பட்ட இந்த பதாகை வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த ஆட்சியில் அம்மனுக்கே மேல் பூட்டா என்ற நிலையில் பக்தர்கள். கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Updated On: 27 Nov 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது