/* */

சாலை மற்றும் குடிநீர் வசதி கேட்டு 7 ஆண்டுகளாக கோரிக்கை: ஆட்சியரிடம் மனு

குன்றத்தூர் வட்டம், தண்டலம் ஊராட்சி பகுதிக்குபட்ட அனுக்கிரஹா அவின்யு பகுதியில் 400 குடும்பங்கள் வசித்து வருகிறது.

HIGHLIGHTS

சாலை  மற்றும் குடிநீர் வசதி கேட்டு  7 ஆண்டுகளாக கோரிக்கை: ஆட்சியரிடம் மனு
X

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

தண்டலம் அனுகிரகம் அவென்யூ விரிவில் சாலை மற்றும் குடிநீர் வசதி செய்து தரக்கோரி பகுதிவாசிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.7 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை தற்போது வரை சீரமைக்கப்படவில்லை எனவும், பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் பிரதி வாரம் திங்கட்கிழமை மக்கள் குறைத்தீர் நாள் முகாம் நடைபெறுகிறது. இதில் பலதரப்பட்ட மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று தண்டலம் அனுகிரகா அவென்யூ விரிவில் சாலை, கால்வாய் மற்றும் குடிநீர் வசதி செய்து தரக் கோரி பகுதிவாசிகள் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியிடம் மனு அளித்தனர்.

இந்த மனுவில் பகுதி வாசிகள் தெரிவித்ததாவது, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் தண்டலம் கிராமத்தில் உள்ள அனுகிரகா அவென்யூ விரிவு என்ற நகரில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.பாலாஜி தெரு, பத்மாவதி தெரு,அலமேலு தெரு, மற்றும் பேசில் கோல்ட் தெரு ஆகிய 4தெருக்கள் உள்ளடக்கி உள்ள இந்த நகரில் சுமார் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு முறை மட்டுமே சாலை போடப்பட்டுள்ளது.இந்த சாலையும் 5 ஆண்டுகளாக இயற்கை சீற்றங்களாலும்,வாகன போக்குவரத்தினாலும் முற்றிலும் சேதமைந்ததாக தெரிவிக்கின்றனர்.

மேலும், கால்வாய் வசதி இல்லாத காரணத்தால் வீடுகளில் இருந்து வெளியேறும் நீரானது சாலைகளின் நடுவே தேங்குகிறது.இதனால் சாலை சேதமடைவது மட்டுமின்றி கொசுக்களும் அதிகளவில் உற்பத்தியாகிறது.

இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு டெங்கு,மலேரியா மற்றும் டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குடியிருப்புகளின் அருகே பொது கால்வாய் உள்ளதால் அந்த கால்வாய் நீரானது குடிநீரில் கலந்து குடிநீர் மாசுபடும் சூழலும் உருவாகிறதாகவும் தெரிவிக்கின்றனர்.

சாலை, குடிநீர் மற்றும் கால்வாய் வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து தரக் கோரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்போர் நல சங்கம் ஒன்றை அமைத்து அதன் மூலமாக ஊராட்சி மன்ற தலைவர், அரசு அலுவலர்கள், அமைச்சர் உள்ளிட்ட பலரை நேரில் சந்தித்து மனு அளித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை

எனவே, அடிப்படை வசதிகளான சாலை, கால்வாய் மற்றும் குடிநீர் வசதிகளை உடனடியாக சரி செய்து தர கோரி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் மனு அளித்தனர்.

Updated On: 12 Feb 2024 12:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  3. ஈரோடு
    ஈரோட்டில் மோடியின் பேச்சை கண்டித்து மகிளா காங்கிரசார் தாலி ஏந்தி...
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?