/* */

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: காஞ்சிபுரத்தில் பட்டுப் பூங்கா துவக்கம் ரத்து

ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பால்காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை நடக்க இருந்த பட்டுப் பூங்கா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: காஞ்சிபுரத்தில் பட்டுப் பூங்கா துவக்கம் ரத்து
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஐந்து ஒன்றியங்களில் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் நேற்று மாலை முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.

காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் கிராமத்தில் சுமார் 100 கோடி மதிப்பீட்டில் பட்டுப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் புத்துயிர் பெற்ற பட்டுப் பூங்கா 25 சதவீத பணிகள் நிறைவுற்ற நிலையில் அண்ணா பிறந்தநாளையொட்டி நாளை காஞ்சிபுரத்தில் திறப்பு விழா நடைபெற இருந்தது.

இப்பூங்கா வினை கைத்தறித் துறை அமைச்சர் காந்தியும் ஊரக தொழில் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் திமுக சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது

இந்நிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகளின் கீழ், அண்ணா பட்டு பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின் நடைபெற உள்ளது.

Updated On: 14 Sep 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?