/* */

சேஷ வாகன வீதியுலாவில் பாதியிலேயே திரும்பிய வரதராஜ பெருமாள்.

பிரம்மோற்சவ விழாவில் தொடர்ச்சியாக ஓய்வு கிடைக்காததால், சாமி சுமந்து செல்லும் கோடியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் வீதி உலாவில் பாதியிலேயே திரும்பியதாக தகவல்.

HIGHLIGHTS

சேஷ வாகன வீதியுலாவில் பாதியிலேயே திரும்பிய வரதராஜ பெருமாள்.
X

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவத்தில் நான்காம் நாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீ வரதராஜ பெருமாள்.

வரதராஜ பெருமாள் பிரம்மோற்சவ விழாவில் தொடர்ச்சியாக ஓய்வு கிடைக்காததால், சாமி சுமந்து செல்லும் கோடியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் வீதி உலாவில் பாதியிலேயே திரும்பிய வரதராஜ பெருமாள்.

அத்திவரதர் புகழ்பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவம் விழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நாள் தோறும் காலை மற்றும் மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளி மாநகர் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலி தருகிறார்.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை விழா நேற்று அதிகாலை நாலு மணி அளவில் துவங்கி மாலை 2 மணிக்கு நிறைவு பெற்றது.

திருக்கோயிலில் இருந்து புறப்பட்டு மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு சாமி வீதி உலா சென்றதால் அதனை சுமந்து செல்லும் ஊழியர்கள் என அழைக்கப்படும் கோடியர்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.

திருவீதி விழாவில் சாமி தூக்கும் ஊழியர்கள் சோர்வு காரணமாக சாமி அதிக இடங்களில் நிறுத்தி ஓய்வெடுத்த போது.

இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு அனுமந்த வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கையில் திடீர் சூறாவளி காற்று மழை காரணமாக இரவு 9 மணி வரை சாமி திருக்கோயில் வளாகத்தில் இருந்தது.

மழை நின்ற பின் வீதி உலா சென்று அதிகாலை மீண்டும் திருக்கோயிலை அடைந்தது. அதன்பின் ஓய்வெடுத்த சாமி சுமந்து செல்லும் ஊழியர்கள் 3 மணி நேர இடைவெளிக்குப்பின் மீண்டும் அழைக்கப்பட்டதால் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டதால் சாமி செல்லும் பாதையை குறைவான தூரம் மாற்றி அமைக்க கேட்டுக் கொண்டும் அதற்குரிய செயல்கள் ஏதும் எடுக்காததால் ஆங்காங்கே சிறிது சலசலப்பு இன்று காலை நாக வாகன புறப்பாட்டின் போது நடைபெற்றது.

இறுதியாக மூங்கில் மண்டபம் வரும் நிலையில் ஊழியர்கள் இதற்கு மேல் தங்களால் சாமி தூக்கி செல்ல இயலாது என தெரிவித்து பாதியிலேயே மீண்டும் திருக்கோயில் நோக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதியில் சாமி ஊர்வலம் திரும்பியதால் மற்ற பகுதியில் தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தும், அதற்குரிய காரணத்தை கேட்டு அறிந்த நிலையில் அவர்களுக்கும் ஓய்வு அவசியம் என்பது அனைவரும் புரிந்து கொண்டதால் எவ்வித சர்ச்சைகளும் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரம்மோற்சவ விழாவில் சாமி சுமக்க சுமார் 150 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிகிறார்கள் என்பதும், சுழற்சி முறையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொடர்ந்து பணிபுரிவதும் குறிப்பிடத்தக்கது.

Updated On: 3 Jun 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  3. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  5. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  6. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  7. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  8. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  10. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...